31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

காராமணிப் பொரியல் செய்வது எப்படி

காராமணி மிகவும் சத்து நிறைந்தது. காராமணி பொரியலை சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று இந்த பொரியல் செய்முறையை பார்க்கலாம்.

காராமணிப் பொரியல் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

காராமணி – கால் கிலோ,
வெங்காயம் – 1,
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
சீரகம் – 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கடுகு – 1 டீஸ்பூன்,
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* காராமணியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்* வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்க்கவும்.

* இஞ்சி – பூண்டு விழுது பச்சை வாடை போனதும் காராமணியும் உப்பும் சேர்க்கவும்.

* லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.

* இதற்கிடையில் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம் மூன்றையும் மிக்சியில் போட்டு ஒன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

* காராமணி வெந்ததும் பொடித்த தேங்காய் விழுதை சேர்த்துக் கிளறவும்.

* குறைந்த தணலில் சில நிமிடங்கள் வைத்திருந்து எடுத்துப்பரிமாறவும்.

* சத்தான காராமணிப் பொரியல் ரெடி.

Related posts

சுலபமான சுவையான சாம்பார் செய்ய எளிமையான சமையல் குறிப்புகள்!

nathan

உருளைக்கிழங்கு கைமா கபாப்

nathan

காளான் பொரியல்

nathan

பச்சை சுண்டைக்காய் குழம்பு

nathan

உருளை கிழங்கு பொரியல்,–சமையல் குறிப்புகள்

nathan

சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ் பாலக்கீரை தால்

nathan

சுண்டைக்காய் குழம்பு

nathan

சூப்பரான கொண்டைக்கடலை குருமா

nathan

வெஜிடபிள் வெள்ளை குருமா

nathan