36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

டோஃபு கட்லெட்

என்னென்ன தேவை?

சோயா பனீர் (Tofu) – 250 கிராம்,
உருளைக்கிழங்கு வேக வைத்து மசித்தது,
சில்லி சாஸ், மிளகுத் தூள்,
உப்பு – தேவைக்கு,
பிரெட் துண்டுகள் – 6,
மேலே தூவுவதற்கு கருப்பு உப்பு அல்லது சாட் மசாலா,
பொரிப்பதற்கு எண்ணெய்.

எப்படிச் செய்வது?

டோஃபுவை பெரிய நீளத்திற்கு (விரல் வடிவில்) வெட்டி வைத்துக் கொள்ளவும். அதன் மத்தியில் கத்தி கொண்டு கீறி சில்லி சாஸை பைப் செய்யவும். அனைத்து டோஃபுவையும் அப்படியே செய்யவும். வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து அத்துடன் தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பிசையவும். இத்துடன் பிரெட் துண்டுகளை தண்ணீரில் முக்கி எடுத்து கெட்டியாக பிழிந்து கிழங்குடன் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை கைகளால் உருண்டைகள் செய்து விருப்பமான வடிவில் தட்டி அதன் உள் டோஃபு துண்டுகளை வைத்து மூடி, சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து வெட்டி தட்டில் பரப்பி வைத்துக் கொள்ளவும். அதன் மேல் சாட் மசாலா தூவி சூடாகப் பரிமாறவும்.

Related posts

இலந்தை பழ வடாகம்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கிரிஸ்பி பனானா

nathan

சம்பல் ரொட்டி

nathan

மாலை நேர சிற்றுண்டி பிரட் முட்டை உப்புமா

nathan

பஞ்சாபி ஸ்பெஷல் பன்னீர் குல்சா

nathan

குஷ்பு  இட்லி,தட்டு  இட்லி,பெப்பர்  இட்லி

nathan

சுவையான சத்தான பாசிப்பருப்பு வெங்காய அடை

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பிஸ்கட் லட்டு

nathan

ஸ்வீட் பிரெட் டோஸ்ட்

nathan