33.6 C
Chennai
Friday, May 31, 2024
Untitled 21
சைவம்

வெங்காய சாதம்

தேவையான பொருட்கள் :
சாதம் – ஒரு கப் (உதிரியாக வடித்தது)
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – ஒன்று
கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு
தாளிக்க : கடுகு
செய்முறை :
• வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை நறுக்கி வைக்கவும்.
• பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
• இதில் சிறிது உப்பு (வெங்காயத்துக்கு மட்டும்), கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
• பச்சை வாசம் போக வதங்கியதும் வடித்த சாதம் கலந்து அழுத்தி வைக்கவும்.
• சுவையான வெங்காய சாதம் தயார். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.
• பெரிய வெங்காயத்துக்கு பதிலாக ஒரு கப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயமும் பயன்படுத்தலாம். பச்சை மிளகாய்க்கு பதில் மிளகாய் தூள் சேர்க்கலாம். தாளிக்க கடுகுடன் சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலையும் சேர்க்கலாம்.

Untitled 21

Related posts

கத்திரிக்காய் பிரியாணி

nathan

பேச்சுலர்களுக்கான… சிம்பிளான தவா மஸ்ரூம்

nathan

வெண்டைக்காய் மோர் குழம்பு

nathan

கொத்தமல்லி சப்பாத்தி செய்வது எப்படி

nathan

பருப்பு முள்ளங்கி வறுவல்

nathan

மீல் மேக்கர் கிரேவி செய்முறை விளக்கம்

nathan

வெண்டைக்காய் வறுவல்

nathan

உருளைக்கிழங்கு மொச்சை வறுவல்

nathan

சுவையான 30 வகை பிரியாணி

nathan