33.7 C
Chennai
Tuesday, Jul 29, 2025
IMG 3035
சிற்றுண்டி வகைகள்

அவல் புட்டு

அவல் புட்டு (aval puttu)
தேவையானவை :

அவல் – 1 கப்

வெல்லம் பொடித்தது – 1/2 கப்

தேங்காய்த்துருவல் – 1/4 கப்

ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு – 10

நெய் – 4 டீஸ்பூன்

செய்முறை:

1.முதலில் வெறும் கடாயில்எண்ணை விடாமல் அவலைப் போட்டு இலேசாக சிவக்கும் வரை வறுத்து ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

2.பிறகு பொடித்தெடுத்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் தெளித்துக் கலக்கவும்.

3.மாவைக் கையில் எடுத்து பிடித்தால் பிடிக்கும் படியும், கையிலிருந்து பாத்திரத்தில் போட்டால் உதிரும் படியும் இருக்க வேண்டும்.

4.முந்திரிப்பருப்பை சிறிது நெய்யில் சிவக்க வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

5.ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/4 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.

6.தேங்காய்த்துருவல் மற்றும் பொடித்த அவல் இரண்டையும் போட்டு கிளறி உடனே அடுப்பை அணைத்து விடவும்.

7.அதில் ஏலக்காய் பொடி, நெய், வறுத்த முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி பின்பு பரிமாறவும்.IMG 3035

Related posts

சுவையான பேபி கார்ன் பெப்பர் ப்ரை

nathan

மைதா சீடை

nathan

ராகி கொழுக்கட்டை

nathan

பிரெட் க்ராப்

nathan

சூப்பரான முட்டை கொத்து பரோட்டா

nathan

ஈஸியான ரவா பொங்கல் செய்ய…

nathan

மினி வெஜ் ஊத்தப்பம்

nathan

சிக்கன் உருளைக் கிழங்கு கட்லெட்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் கேழ்வரகு பக்கோடா

nathan