தேவையான பொருட்கள்
கறுப்பு கொண்டைக்கடலை – ஒரு கப்,
தக்காளி, வெங்காயம் – தலா 1,
பூண்டு – 2,
இஞ்சி – அரை துண்டு,
கறிவேப்பிலை – சிறிதளவு,
தேங்காய் துண்டுகள் – 2,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்,
சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
புளி – நெல்லிக்காய் அளவு,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள், எண்ணெய் –
ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
எப்படி செய்வது?
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை விழுதாக அரைக்கவும்.
கறுப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பூண்டு, இஞ்சி, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இதனுடன் தேங்காய்-சீரக விழுதை சேர்த்து மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், , உப்பு, வெந்த கொண்டைக்கடலையைப் போட்டு, புளியைக் கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.