பாசிப்பயிறில் பல சத்துக்கள் உள்ளன. சுவையான சத்தான பாசிப்பயிறு இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சுவையான சத்தான பாசிப்பயிறு இட்லி
தேவையான பொருட்கள் :
பாசிப்பயிறு – 1 கப்
இட்லி அரிசி – 2 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 4
கறிவேப்பிலை – 1 டேபிள் ஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
சிறிய வெங்காயம் – 1 கப்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
* பாசிப்பயிறு, இட்லி அரிசி இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
* நன்றாக ஊறியதும் அதனுடன் மிளகாய், தனியா, சீரகம், சிறிய வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
* அரைத்த மாவை உப்பு போட்டு கரைத்து 2 மணிநேரம் அப்படியே வைக்கவும்.
* பின்னர் இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான சத்தான பாசிப்பயிறு இட்லி ரெடி.
* இந்த இட்லிக்கு தொட்டு கொள்ள மிளகாய் சட்னி சுவையாக இருக்கும்.