09 1462778089 7 coconutoil
மருத்துவ குறிப்பு

பலவீனமாகி இருக்கும் தலைமுடியை வலிமையாக்கும் சில வீட்டு வைத்தியங்கள்!

நிறைய மக்கள் முடி உதிர்வதால் கவலையால் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். முடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் மயிர்கால்களை வலிமையாக்கும் சில ஹேர் பேக்குகளை வாரம் ஒருமுறை போட்டு வருவதன் மூலம் பலவீனமாகி உதிரும் முடியை வலிமையாக்கலாம்.

அதிலும் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு, குறிப்பாக புரோட்டீன் நிறைந்த பொருட்களைக் கொண்டு ஹேர் பேக் போட்டு வந்தால், நிச்சயம் தலைமுடியின் வலிமையை அதிகரிக்க முடியும். இங்கு தலைமுடியின் வலிமையை அதிகரிக்கும் சில ஹேர் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அவற்றைப் படித்து, அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து வாரம் ஒருமுறை தலைக்கு ஹேர் மாஸ்க் போட்டு வருவதன் மூலம், முடியின் வலிமையுடன், வளர்ச்சியையும் அதிகரிக்கலாம்.

முட்டை ஹேர் பேக்

முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதிலும் முட்டையின் வெள்ளைக்கருவில் தான் அதிகம் உள்ளது. ஆகவே முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் அதில் உள்ள புரோட்டீன், மயிர்கால்களை வலிமையாக்கும்.

பால் ஹேர் பேக்

தலைமுடியை நீரில் அலசிய பின், முடியில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து, பின் பால் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், மயிர்கால்களின் வலிமைக்கு வேண்டிய புரோட்டீன் கிடைத்து, முடி வலிமையடையும்.

ஹென்னா ஹேர் பேக்

ஹென்னா தலையில் உள்ள நரைமுடியை கருமையாக்க உதவுவதோடு, அது முடியின் அடர்த்தியையும், வலிமையையும் அதிகரிக்கும். ஆகவே மாதத்திற்கு ஒருமுறை இரவில் படுக்கும் முன் ஹென்னா பொடியை நீரில் கலந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும்.

வாழைப்பழ ஹேர் பேக்

வாழைப்பழத்தில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகம் உள்ளது. இது மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்களை வழங்கி, முடியின் வலிமையை அதிகரிக்கும். ஆகவே அத்தகைய வாழைப்பழத்தை மசித்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் நன்கு அலச, முடியின் வலிமை அதிகரித்து, உதிர்வது குறையும்.

பீர் ஹேர் பேக்

ஆம், பீர் தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் பொருட்களில் ஒன்று. அதற்கு பீரை நீரில் கலந்து, அதனை ஸ்கால்ப்பில் படும் படி அலசி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனாலும் முடியின் வலிமை மேம்படும்.

நெல்லிக்காய் ஹேர் பேக்

பழங்காலம் முதலாக நெல்லிக்காய் தலைமுடியின் வலிமையை அதிகரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய நெல்லிக்காயின் சாற்றினை ஸ்கால்ப்பில் தடவியோ அல்லது தினமும் ஒரு நெல்லிக்காயை உட்கொண்டு வந்தாலோ, தலைமுடியின் வளர்ச்சி அதிகரித்து, பொடுகுத் தொல்லையும் குறையும்.

தேங்காய் எண்ணெய்

2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், 30 நாட்களில் முடி உதிரும் பிரச்சனையை முற்றிலும் தடுக்கலாம்.09 1462778089 7 coconutoil

Related posts

தெரிஞ்சிக்கங்க…பலரையும் ஆச்சரியப்பட வைக்கும் அறிவாற்றலை அழிக்கும் விஷயங்கள்!!!

nathan

சர்க்கரை நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம்

nathan

உங்களுக்கு தெரியுமா முடி உதிர்தல், உடல் பருமன், தூக்கமின்மை அதிகரிக்க இந்த ஒரு விஷயம் தான் காரணம்னு

nathan

vembalam pattai benefits for hair – வெம்பலம் பட்டையின் (Neem Bark) முடிக்கு பயன்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா மூலம் நோய்க்கு வீட்டிலேயே செய்யும் இயற்கை மருந்து…

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! சிறுநீர்ப்பை புற்றுநோயின் அபாயம் யாருக்கு அதிகமாக உள்ளது? அறிகுறிகள் என்ன?

nathan

சித்த மருத்துவத்தில் கூறப்படும் அழகுக் குறிப்புகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தையின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சில அற்புத உணவுகள்!

nathan

சித்த மருத்துவ குறிப்புகள் 1

nathan