27.2 C
Chennai
Tuesday, Jan 27, 2026
201606291232245599 abortion problems of menopause SECVPF
மருத்துவ குறிப்பு

கருக்கலைப்பிற்கு பிந்தைய மாதவிடாய் பிரச்சனைகள்

கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்த சிசு சிதைந்துபோதல் அந்தப் பெண்ணின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

கருக்கலைப்பிற்கு பிந்தைய மாதவிடாய் பிரச்சனைகள்
கருச்சிதைவானது ஒரு விபத்தின் காரணமாக நடந்திருந்தாலும் அல்லது உங்களுடைய தவறுகள் காரணமாக நடந்திருந்தாலும், அது மோசமான விளைவுகளையே ஏற்படுத்துகின்றது.

கருச்சிதைவிற்கு உள்ளான பெண் அடுத்த முறை மற்றொரு குழந்தைக்கு திட்டமிடும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு கருச்சிதைவிற்கு பின்னர், குறிப்பாக முதல் முறைக்குப் பின்னர், அந்தப் பெண்ணிற்கு மீண்டும் ஒரு முறை கருச்சிதைவு ஏற்பட 70 சதவீத வாய்ப்புகள் உள்ளன.

கருச்சிதைவிற்கு பின்னர் பெண்களுக்கு வரும் முதல் மாதவிடாய் காலம் மிக மோசமான ஒன்றாகும். சுகாதார நிபுணர்கள், ஒரு கருக்கலைப்பிற்கு பிறகு வரும் மாதவிடாய் காலம் என்பது ஒரு பெண்ணிற்கு சிறிய ஆபத்தை உண்டாக்கும், எனத் தெரிவிக்கின்றார்கள்.

கருச்சிதைவு மூலம் நிறைய இரத்தப்போக்கு ஏற்படும் என்பதால், பெண்களின் கருச்சிதைவிற்கு பின்னர் வரும் முதல் மாதவிடாய் காலத்தில் வழக்கத்தை விட இன்னும் சற்று அதிகமாக இரத்தம் வரும் வாய்ப்புக்கள் உள்ளன. பெண்கள் கருச்சிதைவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களை பார்க்கலாம்.

கருக்கலைப்பிற்கு பிறகு, 2 வாரங்கள் கழித்து, உங்களுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டால், நீங்கள் ஒரு மருத்துவரை கலந்தாலோசிப்பது மிகவும் நல்லது. அவ்வாறு இல்லாமல், உங்களின் மாதவிடாய் காலத்திற்கு பிந்தைய 7 நாட்களில் உங்களுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டால், உங்கள் இனப்பெருக்க அமைப்புகளில், கலைந்த சிசுவின் எஞ்சிய திசுக்கள் தங்கியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.

கருக்கலைப்பிற்கு பிறகு ஒழுங்கற்ற மாதவிடாய் காலம் ஏற்பட்டால், அது ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக இருக்கலாம். அவ்வாறு ஏற்பட்டால் உங்களின் உடலானது, உங்களுடைய கருச்சிதைவிற்கு பின்னர் தேறி வருகின்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உங்களுடைய ஹார்மோன்கள் மீண்டும் வழக்கமான நிலைக்கு திரும்பி விட்டால், உங்களுக்கு மீண்டும் வழக்கமான மாதவிடாய் காலங்கள் தொடங்கும்.

சில சூழ்நிலைகளில், ஒரு பெண்ணிற்கு ஒரு மாதத்தில் இருமுறை உதிரப்போக்கு ஏற்படலாம். இந்த பிரச்சனை ஏற்படும் போது, ‘கருப்பையில் இருந்து நஞ்சுக்கொடி வெளியேறுகின்றது எனத் தெரிந்து கொள்ளலாம்’, என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இது பொதுவாக ஆரம்பகால கருச்சிதைவை குறிக்கின்றது.

உங்களுடைய கருச்சிதைவிற்கு பிறகு ஒரு மாதம் கழித்தும், உங்களுக்கு இயல்பான மாதவிடாய் வரவில்லை எனில் கவலை வேண்டாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எல்லா பெண்களுக்கும் இது ஏற்படுகின்றது.
201606291232245599 abortion problems of menopause SECVPF

Related posts

மார்பக வீக்கம்.. குமட்டல்! இன்னும் பல அறிகுறிகள்?

nathan

செலவுகளுக்கு கடிவாளம் போடுவது எப்படி?

nathan

கருத்தரிப்பதை பாதிக்கும் மனஅழுத்தம்

nathan

உள்ளாடையைத் தேர்ந்தெடுக்கும் முன் இதை கவனியுங்கள் பெண்களே!

nathan

சூப்பர் டிப்ஸ்! காயங்கள் சீழ்கட்டி பெரிதாகாமல் இருக்க வீட்டிலிருக்கும் இந்த எளிய பொருட்களே போதும்….

nathan

ஆபீஸ் ஸ்ட்ரெஸ் தவிர்க்கும் வழிகள்!

nathan

சிறுநீரகக் கற்கள் உருவாவதை எப்படி தெரிந்துகொள்வது?

nathan

கழுத்து வலிக்கு எளிய சித்த மருத்துவம்

nathan

ஒவ்வாமைப் பரிசோதனைகள்

nathan