26.6 C
Chennai
Monday, Nov 25, 2024
25
சிற்றுண்டி வகைகள்

கோதுமை காக்ரா

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒன்றரை கப்,
ரவை – கால் கப்,
சீரகம் அல்லது ஓமம் – அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்,
சமையல் சோடா – கால் டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்,
வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• கோதுமை மாவுடன் ரவை, சீரகம் அல்லது ஓமம், மிளகாய்த்தூள். சமையல் சோடா, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து, வெதுவெதுப்பான நீர் விட்டு கலந்து கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
• பின்னர் பிசைந்து சிறு எலுமிச்சை சைஸ் உருண்டைகளாக செய்யவும். இதை கைகளால் நன்றாக உருட்டி, வெறும் மாவு தொட்டு எண்ணெய் தடவிய சப்பாத்திக் கல்லில் மெல்லிதாக 6 இஞ்ச் விட்டத்துக்கு பரத்தவும். இதை சூடான நான்ஸ்டிக் தவாவில் போட்டு சுழற்றி, திருப்பிப் போடவும். இதில் குமிழ்கள் தோன்றி சிவப்பானதும் எடுத்து வைக்கவும். இது எண்ணெய் சேர்க்காத சுட்ட அப்பளங்களைப் போல் இருக்கும்.
• ஆறவிட்டு பிளாஸ்டிக் ஜிப்லாக் கவரில் போட்டு வைத்தால், ஒரு வாரம் வரை கெடாது.
• இதை நெய், ஜாம், சாஸ் தொட்டு சாப்பிடலாம்.25

Related posts

டோஃபு கட்லெட்

nathan

சுவையான குடைமிளகாய் சாண்ட்விச்

nathan

கார்ர பெண்டலம் பிட்டு

nathan

இட்லி மஞ்சுரியன்

nathan

அதிரசம் என்ன அதிசயம்?

nathan

ஸ்வீட் கார்ன் சௌடர்

nathan

கேழ்வரகு கொழுக்கட்டை

nathan

பீட்ரூட் சப்பாத்தி

nathan

மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வடை

nathan