28.6 C
Chennai
Saturday, Jun 22, 2024
1465801032 0483
அசைவ வகைகள்

இறால் பெப்பர் ப்ரை

தேவையான பொருட்கள்:

இறால் – 400 கிராம்
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – 30 கிராம்
பூண்டு – 30 கிராம்
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிது
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:

* இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஊற வைக்க வேண்டும்.

* இஞ்சி, பூண்டு அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடிப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி கலவையை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வதக்க வேண்டும்.

* பின்னர் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை 5 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். இறால் அளவுக்கு அதிகமாக வெந்துவிடக்கூடாது. இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கினால் இறால் பெப்பர் ப்ரை ரெடி. இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
1465801032 0483

Related posts

மாசி கருவாட்டு தொக்கு செய்வது எப்படி…..

sangika

இறால் குடமிளகாய் வறுவல்

nathan

ஆத்தூர் மட்டன் மிளகு கறி

nathan

தீபாவளிக்கு என்ன மட்டனா? இதை ட்ரை பண்ணலாமே!

nathan

சீரக மீன் குழம்பு

nathan

கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா

nathan

அயிரை மீன் குழம்பு

nathan

ஆனியன் சிக்கன் வறுவல்

nathan

ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை ரெடி!!!

sangika