26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
201606181114288196 how to make palak tofu gravy SECVPF
சைவம்

சுவையான பாலக் டோஃபு கிரேவி செய்வது எப்படி

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் பசலைக்கீரை மற்றும் புரோட்டீன், கால்சியம் அதிகம் நிறைந்த டோஃபு கொண்டு கிரேவி செய்யுங்கள். இது அற்புதமாக இருக்கும்.

சுவையான பாலக் டோஃபு கிரேவி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

டோஃபு – 300 கிராம்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பட்டை – 3 துண்டு
பிரியாணி இலை – 1
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
பால் – கால் கப்
சோள மாவு – 1 டீஸ்பூன்

பசலைக்கீரை சமைப்பதற்கு…

பசலைக்கீரை/பாலக் – 4 கப்
பூண்டு – 2 பற்கள்
பச்சை மிளகாய் – 1
தண்ணீர் – 1/2 கப்

செய்முறை :

* பசலைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்..

* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* டோஃபுவை மீடியம் சைஸ் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் பசலைக்கீரை, பூண்டு, பச்சை மிளகாய் – 1, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து 10 நிமிடம் வைத்து கீரையை வேக வைக்கவும்.

* வெந்த கீரையை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய, பின் மசாலா பொடி அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறிய பின் அரைத்து வைத்துள்ள கீரை கலவையை ஊற்றி, கிரேவி அதிகம் வேண்டுமானால் தண்ணீர் சிறிது ஊற்றி, உப்பு சேர்த்து, மிதமான தீயில் 10 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.

* கிரேவி பதம் வந்ததும் இறுதியில் அதில் டோஃபு சேர்த்து குறைவான தீயில் 7 நிமிடங்கள் வேக வைக்கவும்.

* பாலில் சோள மாவு சேர்த்து கலந்து, கிரேவியுடன் சேர்த்து பச்சை வாசனை போக சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால், பாலக் டோஃபு ரெடி!!!201606181114288196 how to make palak tofu gravy SECVPF

Related posts

கேரள கடலை கறி செய்வது எப்படி

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் முள்ளங்கி சூப்

nathan

புளியானம்! வாசகிகள் கைமணம்!!

nathan

செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு வறுவல்

nathan

குதிரைவாலி அரிசி பிரியாணி

nathan

ப்ரோக்கோலி பொரியல்

nathan

பொடித்த மிளகு சாதம்

nathan

சுவையான கொத்தமல்லி சப்பாத்தி செய்வது எப்படி

nathan

பிர்னி

nathan