சூப் வகைகள்

வாழைத்தண்டு சூப்

என்னென்ன தேவை?

நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப்,
வெங்காயம் – 1,
பிரிஞ்சி இலை – 1,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
பாசிப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்,
நெய், உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கடாயில் நெய் விட்டு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும். 5 நிமிடங்கள் கழித்து, நறுக்கிய வாழைத்தண்டை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். குக்கரில் அத்துடன் பாசிப் பருப்பும் போட்டு, 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும். ஆறியதும் பிரிஞ்சி இலையை எடுத்துவிட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை வடிகட்டி, தண்ணீர் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். சூடாகப் பரிமாறவும். தேவைப்பட்டால் 1 டீஸ்பூன் கார்ன் ஃப்ளோரை கரைத்து விட்டு கொதிக்க விடவும்.

Related posts

சுவையான சத்தான ஸ்வீட் கார்ன் சூப்

nathan

வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான ரசப்பொடி

nathan

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பூசணிக்காய் சூப்

nathan

தக்காளி பேசில் சூப்

nathan

வெற்றிலையில் நெல்லி ரசம் எப்ப‍டி வைப்ப‍து?…

sangika

சத்தான பசலைக்கீரை பருப்பு சூப்

nathan

சத்தான மணத்தக்காளி சூப் செய்வது எப்படி

nathan

சத்தான சுவையான வெண்டைக்காய் சூப்

nathan

காலிஃபிளவர் சூப்

nathan