33.7 C
Chennai
Tuesday, Jul 29, 2025
halwaaaa2
இனிப்பு வகைகள்

மாம்பழ அல்வா : செய்முறைகளுடன்…!

தேவையான பொருட்கள் :

மாம்பழ கூழ் – 2 கப்
சர்க்கரை – ஒரு கப்
நெய் – அரை கப்
சோள மாவு – 1 ஸ்பூன்
பாதாம், முந்திரி – தேவைக்கு
ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி
செய்முறை :

* பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

* அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து கால் கப் நெய் ஊற்றி மாம்பழ விழுதை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறவும்.

* மாம்பழ கலவை நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சோள மாவு கரைசலை ஊற்றி நன்றாக கைவிடாமல் கிளறவும்.

* இடையிடையே 5 நிமிடத்திற்கு ஒருமுறை 1 ஸ்பூன் நெய்யை ஊற்றி கிளறிகொண்டே இருக்க வேண்டும்.

* அடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.

* சர்க்கரை நன்றாக கரைந்து ஓரங்களில் நெய் வர ஆரம்பித்தவும் அல்வா பதம் வந்ததாக அர்த்தம்.

* இப்போது நறுக்கி வைத்துள்ள பாதாம், முந்திரிஏலக்காய் தூளை போட்டு கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி 2 மணி நேரம் கழித்து துண்டுகளாக போட்டு பரிமாறவும்.

* சுவையான இனிப்பான மாம்பழ அல்வா ரெடி.halwaaaa

Related posts

திருநெல்வேலி அல்வா

nathan

பிரட் ஜாமூன்

nathan

சத்தான நட்ஸ் லட்டு

nathan

கொக்கோ தேங்காய் பர்ஃபி

nathan

பீட்ருட் வெல்ல அடை… பிரமாத சுவை! வாசகிகள் கைமணம்!!

nathan

அதிரசம், மைசூர் பாகு செய்ய வேண்டுமா??

nathan

கேரட் போண்டா

nathan

எளிமையாக செய்யக்கூடிய கேரட் அல்வா

nathan

கருப்பட்டி புட்டிங் செய்வது எப்படி தெரியுமா?

nathan