201606071423144645 how to make meal maker gravy SECVPF
சைவம்

மீல் மேக்கர் கிரேவி செய்முறை விளக்கம்

மீல் மேக்கரில் விதவிதமாக சமைக்கலாம். இப்போது சுவையான மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

மீல் மேக்கர் கிரேவி செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :

மீல் மேக்கர் – 20 (எண்ணிக்கையில்)
சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 2
தேங்காய் – கால் கப்
இஞ்சி பூண்டு விழுது – தேவைக்கு
மிளகாய் தூள் – தேவைக்கு
பச்சை மிளகாய் – 3
பட்டை – 3 துண்டு
கிராம்பு – 4
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

* முதலில் மீல் மேக்கர் முழ்கும் அளவு தண்ணீரை கொதிக்க வைத்து மீல் மேக்கரை அதில் 20 நிமிடம் ஊற வைக்க வேணடும்.

* மிக்ஸியில் தக்காளி, வெங்காயத்தை தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.

* தேங்காயை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

* அதனுடன் வெங்காய விழுதை போட்டு 3 நிமிடம் வதக்கவும்.

* வெங்காயம் வதங்கி நிறம் மாறியவுடன் அதில் தக்காளி விழுதையும் சேர்த்து மீண்டும் 3 நிமிடம் வதக்கவும்.

* பச்சை மிளகாய் போட்டு வதக்கி விட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவும்.

* 3 நிமிடம் கழித்து தண்ணீரில் போட்டு வைத்துள்ள மீல் மேக்கரை நன்றாக தண்ணீரை பிழிந்து விட்டு இந்த கலவையில் போட்டு நன்கு பிரட்டி விடவும்.

* அடுத்து அதில் தேங்காய் விழுது, கால் கப் தண்ணீர் ஊற்றி மூடி மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைக்கவும்.

* மீல் மேக்கர் கிரேவி கெட்டியாக தண்ணீர் வற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி, புதினாவை போட்டு கிளறி இறக்கவும்.

* சுவையான மீல் மேக்கர் கிரேவி ரெடி.
201606071423144645 how to make meal maker gravy SECVPF

Related posts

பெங்காலி ஸ்டைல் காலிஃப்ளவர் குழம்பு

nathan

கத்தரிக்காய் ரைஸ் செய்வது எப்படி

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வறுவல்

nathan

உருளைக்கிழங்கு ரெய்தா

nathan

சம்பா கோதுமை புலாவ்

nathan

கசப்பில்லாத பாகற்காய் சாம்பார் செய்வது எப்படி

nathan

ராஜ்மா பிரியாணி செய்வது எப்படி

nathan

மழைக் காலத்திற்கேற்ற மிளகுக் குழம்பு

nathan

உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்

nathan