27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
IwadTNk
முகப் பராமரிப்பு

முக அழகில் முதன்மையானது புருவ அழகு

பெண்களுக்கு முதன்மையான அழகு கண்கள் தான். கண்களை மட்டும் நன்றாக அலங்கரித்து விட்டால் பாதி அழகு வந்துவிடும். அந்த கண்களின் அழகை பிரதிபலிக்க உதவுவது புருவங்கள். அழகிய புருவம் கொண்ட பெண்கள் முகம் எப்போதும் பளிச் சென்று எடுப்பாக தெரியும். புருவங்களை பராமரிக்க எளிமையான டிப்ஸ் இதோ.

புருவங்களின் முடி வளர்ச்சிக்கு விளக் கெண்ணெய் மிகவும் முக்கியம். அதனுடன் சமஅளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெய் அல்லது அரோமா எண்ணெய் கலந்து மசாஜ் செய்யலாம். இது புருவங்களில் உள்ள ரோம வளர்ச்சிக்கு உதவுவதுடன் அப்பகுதியில் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. எண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்கு முன்பாக இரண்டு, மூன்று முறை கிள்ளி விடுவது போல் அழுத்தம் கொடுக்கவேண்டும்.

மசாஜ் செய்வதால் முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர உதவிசெய்கிறது. தினசரி குளிக்க செல்லும் முன்பு புருவங்கள் மேல் எண்ணெய் தடவி ஊறிய பின்பு குளிக்கலாம். இது புருவங்களை அழகு படுத்துகிறது. புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் அகற்றுவதே நல்லது. சில பெண்கள் வாக்சிங் முறையில் புருவங்களில் உள்ள முடிகளை அகற்றுகின்றனர் இது தவறானது.

இவ்வாறு செய்வதால் தசைகள் சுருங்கி தொய்ந்து போகிறது. பிளேடு பயன்படுத்தி சிலர் புருவ முடிகளை சேப் செய்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது. அவ்வாறு அகற்றுபவர்களுக்கு புருவங்களில் முடி விரைவாக வளரும். அதுதவிர வளரும் முடிகள் மிகவும் திக்காகவும், தாறுமாறாகவும் முறையற்றும் வளரும். புருவங்களில் நரைமுடி இருப்பின் மஸ்காரா பயன்படுத்தி கருமையாக்கலாம்.

மஸ்காரா பிரஷ்சை காயவைத்து லேசாக நரைமுடிகளில் தடவலாம். ஐ ப்ரோ பென்சில் பயன்படுத்துவதை காட்டிலும் இதுபோன்று செய்வது அழகாவும், இயற்கையாகவும் இருக்கும். கண்களுக்கு அடிக்கடி ஐ பேட் உபயோகிக்கலாம் இதன் மூலம் கண்கள் குளிர்ச்சி அடைவதுடன் புருவங்களும் நன்கு வளரும்.IwadTNk

Related posts

மங்கு குணமாகுமா?

nathan

பனிக்காலத்தில் சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா?

nathan

முக அழகை பேண புது வித குறிப்பு!…

sangika

தெரிஞ்சிக்கங்க… உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யும் பொருட்கள் இதுதான்..!!!!

nathan

முகத்தில் உள்ள முகப்பருக்கள் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்துமே குணமாக அற்புதமான எளிய தீர்வு….

nathan

முக அழகிற்கு கரித்தூளைப் பயன்படுத்தலாம்

nathan

பவுடர் போட போறீங்களா

nathan

சூப்பர் டிப்ஸ் எண்ணெய் சருமத்திற்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு

nathan

ஆர்கானிக் ஃபேஷியல் இவ்வளவு நன்மைகளா?

nathan