29.8 C
Chennai
Friday, Jul 11, 2025
5
மருத்துவ குறிப்பு

மலக்கழிவு சொல்லும் உடல் ஆரோக்கியம்!

ழிவறையை சமஸ்கிருதத்தில் ‘செளசாலயம்’ என்பார்கள். உடல் கழிவை நீக்கி, ஆரோக்கியம் பேணும் இடம் என்பதால், அந்த இடத்துக்கு ஆலய அந்தஸ்து அளித்தது நம் மரபு. மலம் எனும் கழிவு நம் ஆரோக்கியம் காட்டும் அற்புதக் கண்ணாடி. உங்கள் ஆரோக்கியம் அறிய ஒரு டாய்லட் டேட்டா இங்கே!

5
6

டைப் 1:  உதிரி உதிரியாக, தடிமனான கட்டிகள்போல வெளியேறும் மலம், கொட்டைகளைப்போல

தீவிர மலச்சிக்கல் இது. கட்டாயம் நீர், நார்ச்சத்துக்கள் நிரம்பிய உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

டைப் 2: உதிரி உதிரியாக சிறிய கட்டிகளாகவும், சிறிது நார்மலாகவும் மலம் வெளிவரும். மலத்தை வெளியேற்றுவது சிறிது கடினமாகத்தான் இருக்கும்.

மலச்சிக்கலின் ஆரம்ப நிலை. துரித உணவுகளைத் தவிர்த்து, காய்கறி, பழங்கள், பயறுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

டைப் 3: மலக்கழிவின் இடையே வெட்டுக்கள், பிசிறுகள் இருக்கும். மலத்தை வெளியேற்ற வலியோ, சிரமமோ இருக்காது.

நார்மல் நிலை இது. உணவை மென்று தின்னும் பழக்கத்தில் ஈடுபடுவது நல்லது.

டைப் 4:
ஸ்மூத்தாக இருக்கும். மலத்தை வெளியேற்ற எந்தச் சிக்கலும் இருக்காது.

நார்மல். சமச்சீர் உணவைத் தொடர்ந்து சாப்பிட்டுவரலாம்.

டைப் 5: மிருதுவான, மிதக்கும்தன்மையில் சின்னச்சின்னத் துண்டுகளாக வெளியேறும். வலியோ, சிரமமோ இருக்காது.

நார்ச்சத்துக்களின் பற்றாக்குறையை உணர்த்துகிறது. அஜீரணக் கோளாறுகள், நேரம் கடந்து சாப்பிடும் பழக்கம் போன்றவை இருக்கிறதா எனக் கவனித்துச் சரி செய்துகொள்ளுங்கள்.

டைப் 6:
திருத்தமற்ற சுருள்கள்போல காணப்படும். பேஸ்ட் போன்ற நிலையில் இருக்கும்.

டீஹைட்ரேஷன், மனஅழுத்தம், மனச்சோர்வு இருக்கிறதா எனக் கவனித்து சரி செய்துகொள்ளுங்கள்.

டைப் 7: திடமான மலக்கழிவாக இல்லாமல் நீர்த்தன்மையுடன் இருக்கும்.

தொடர்ந்து இதுபோன்ற பிரச்னை இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று, உடலைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.


காணப்படும். சிரமப்பட்டு மலத்தை வெளியேற்றுவார்கள்.

Related posts

உங்கள் துணைவி எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ள இதை படியுங்கள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப கால முதுகுவலியைத் தவிர்க்க சில எளிய வழிகள்

nathan

தைய்ராய்டு பிரச்சினையா?

nathan

காதல் பார்வை பற்றி பெண்களின் கருத்து

nathan

உடலும், மனமும் பாதிக்கப்பட்டால் அல்சர் வருவது உறுதி

nathan

இளம் பெண்களின் கல்யாண ஆசைகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க… மூக்கு ஒழுகாமல் தடுப்பது எப்படி? செலவில்லாமல் எப்படி விரட்டலாம்?

nathan

பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்..

nathan

30 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு இந்த பரிசோதனைகள் அவசியம்

nathan