இனிப்பு வகைகள்

லாப்சி அல்வா

என்னென்ன தேவை?

கோதுமை ரவை/பாம்பே ரவை/சம்பா ரவை ஏதேனும் ஒன்று – 1 கப்,
சர்க்கரை – 2 முதல் 2 1/2 கப்,
நெய் – 1 கப்,
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
தண்ணீர் – 5-6 கப் அல்லது தேவைக்கு,
அலங்கரிக்க முந்திரி, உலர்திராட்சை, பாதாம், பிஸ்தா (விருப்பத்திற்கு).
எப்படிச் செய்வது?

சிறிது நெய்யில் முந்திரி, உலர் திராட்சை, பாதாம்/ பிஸ்தா ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் மீண்டும் சிறிது நெய் சேர்த்து ரவையை நல்ல சிவக்க வாசனை வரும் வரை வறுக்கவும். பின் இறக்கி வைக்கவும். வேறு ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் சேர்த்து ரவையை கொட்டி கைவிடாமல் நன்றாக கிளறி வேக விடவும். இது நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.

அவ்வப்போது மீதி இருக்கின்ற நெய்யையும் சேர்க்கவும். இந்தக் கலவை நல்ல அல்வா பதம் வரும் போது வறுத்த முந்திரி, நட்ஸை பாதி பாகத்தை சேர்த்துக் கிளறவும். ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். இது நல்ல அல்வா பதம் வந்ததும் தேவைப்பட்டால் நெய், மீதி உள்ள நட்ஸ் சேர்த்து தூவி கிளறி இறக்கவும். சப்புக் கொட்ட வைக்கும் அல்வா தயார்.

Related posts

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம்..!எளிதாக எப்படி செய்வது

nathan

குழந்தைகளுக்கான கேரமல் கஸ்டர்டு புட்டிங்

nathan

தெரளி கொழுக்கட்டை

nathan

சுவையான பால் கொழுக்கட்டை ரெடி…

sangika

ரவா கேசரி

nathan

பூந்தி லட்டு எப்படி என்று பார்க்கலாம்.

nathan

அத்திப்பழ லட்டு

nathan

சேமியா கேசரி: நவராத்திரி ஸ்பெஷல்

nathan

தித்திப்பான பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி

nathan