சிறுசு முதல் பெருசு வரை அனைவரின் நாவையும் சுண்டி இழுக்கும் ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சுவையான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி மாவு – 2 கப்
தேங்காய்ப்பால் (முதல் பால்) – 1 கப்
2-வதாக எடுத்த தேங்காய்ப்பால் – தேவைக்கு
பால் – 3 கப்
சர்க்கரை – 2 1\2 கப்
ஏலக்காய் – 4
உப்பு – தேவைக்கு
செய்முறை :
* பாலை நன்றாகக் காய்ச்சவும்.
* அரிசி மாவில் மூன்று ஸ்பூன் தனியே எடுத்துவிட்டு மீதமுள்ள மாவில் காய்ச்சிய பாலை விட்டு, சிறிது உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.
* பிசைந்த மாவைச் சிறுசிறு உருண்டைகளாக பிடித்து, ஆவியில் 8 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை போட்டு, இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, சர்க்கரை கரைய வைத்து நீர்த்த பாகாக்கவும்.
* அடுத்து அதில் எடுத்து வைத்த 3 ஸ்பூன் அரிசி மாவை சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும்.
* சிறிது கெட்டியாக பாயசம் போல வரும், அப்போது ஆவியில் வேக வைத்த கொழுக்கட்டையை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறிவிடவும்.
* பின்னர், பால், முதல் தேங்காய்ப்பால் இரண்டையும் ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஏலக்காயை தூள் சேர்த்து இறக்கி வைக்கவும்.
* சுவையான பால் கொழுக்கட்டை ரெடி.
* நீங்கள் விரும்பி வடிவில் கொழுக்கட்டையை செய்து கொள்ளலாம்.