28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
egg 2863676f
சிற்றுண்டி வகைகள்

முட்டை சென்னா

என்னென்ன தேவை?

கருப்பு கொண்டைக்கடலை – 100 கிராம்

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 3

முட்டை – 3

மிளகுத் தூள், சீரகத் தூள் – தலா ஒரு டீஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லித் தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவையுங்கள். மறுநாள் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவையுங்கள். வாணலியில் தேவையான எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். நன்றாக வதங்கியதும் அதில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனுடன் மிளகுத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். உதிரியாக வந்ததும் வேகவைத்த கடலையைச் சேர்த்து சிறு தீயில் சிறிது நேரம் வையுங்கள். கொத்தமல்லித் தழையைத் தூவி அலங்கரியுங்கள். புரோட்டின் சத்து அதிகம் உள்ள இந்த சுண்டல், வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.egg 2863676f

Related posts

சுரைக்காய் தோசை

nathan

கோதுமை காக்ரா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்வீட் கார்ன் வடை

nathan

சர்க்கரை வள்ளி கிழங்கு புட்டு

nathan

எளிமையாக செய்யக்கூடிய ஜவ்வரிசி உப்புமா

nathan

மிளகு பட்டர் துக்கடா

nathan

காராமணி கொழுக்கட்டை

nathan

றுதானிய கார குழிப்பணியாரம்…

nathan

30 வகை நட்ஸ் ரெசிப்பி!

nathan