கருணைக்கிழங்கு காரப் பணியாரம்
தேவையானவை: அரிசி – ஒரு கப், கருணைக்கிழங்கு – கால் கிலோ, காய்ந்த மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப), இஞ்சி – ஒரு சிறிய துண்டு, தயிர் – கால் கப், கோதுமை மாவு – 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – கால் கப், கொத்தமல்லித்தழை – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஊறவைக்கவும். கருணைக்கிழங்கை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, லேசாக வேகவைக்கவும். ஊறிய அரிசியுடன் கிழங்கு, தோல் சீவிய நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, தயிர், கோதுமை மாவு சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு, சூடானதும் மாவை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.