31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

த்ரெட்டிங் செய்த பின் வரும் பருக்களை தடுக்கும் வழிகள்

த்ரெட்டிங் செய்த பின் வரும் பருக்களை தடுக்கும் எளிய வழிமுறைகள்

த்ரெட்டிங் செய்த பின் வரும் பருக்களை தடுக்கும் வழிகள்
* த்ரெட்டிங் செய்யும் முன், முகத்தை நீரினால் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். குறிப்பாக சுடுநீரைப் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் சுடுநீர் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கிவிடும்.

* முகத்தை நீரில் கழுவியப் பின், சுத்தமான காட்டன் துணியால் முகத்தைத் துடைக்காமல், ஒற்றி எடுக்க வேண்டும். ஏனெனில் துடைத்தால், சருமம் பாதிக்கப்படக்கூடும்.

* பின் இயற்கையான டோனரைக் கொண்டு முகத்தைத் துடைக்க வேண்டும். அதிலும் சீமைச் சாமந்தி டீ அல்லது கற்றாழை ஜெல் கொண்டு துடைத்து, உலர விடுங்கள். அதன் பின் பியூட்டிசியனை த்ரெட்டிங் செய்ய அனுமதியுங்கள்.

* த்ரெட்டிங் செய்து முடித்த பின், மீண்டும் டோனரை தடவி, ஒரு ஐஸ் கட்டியால் அவ்விடத்தை ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் சருமத்துளைகள் அமையாகி, பிம்பிள் வருவது தடுக்கப்படும்.

* ஒருவேளை உங்களுக்கு முகம் கழுவ வேண்டுமென்பது போல் தோன்றினால், ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துங்கள். இதனால் த்ரெட்டிங் மூலம் ஏற்பட்ட காயங்கள் மற்றும் பிம்பிள் வருவது தடுக்கப்படும்.

* த்ரெட்டிங் செய்து முடித்த பின் 6 மணிநேரத்திற்கு அவ்விடத்தைத் தொடக்கூடாது. அதேப்போல் கண்ட க்ரீம்களையும் பயன்படுத்தக்கூடாது. அதுமட்டுமின்றி, குறைந்தது 12 மணிநேரத்திற்கு ஸ்கரப் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

Related posts

முகத்தை இளமையாக்கும் ஆளி விதை மாஸ்க் !!

nathan

மூக்கைச் சுற்றியுள்ள கரும் புள்ளிகளை எவ்வாறு அகற்றுவது?

nathan

முகம் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்க சில எளிய குறிப்புகள்

nathan

தினமும் இரவில் கேரட்டை பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால் ஏற்படும் மாற்றங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா டீயை வெச்சும் ஃபேஸ் மாஸ்க் பண்ணலாம் !!!

nathan

பூக்கள் தரும் புது அழகு

nathan

தினமும் ஒரே ஒரு நிமிடம் இதை செய்வதால் உங்களது புருவம் அடர்த்தியாகும் தெரியுமா !முயன்று பாருங்கள்

nathan

எப்போதும் முகம் ப்ரெஷாக இருக்க சூப்பர் டிப்ஸ்…

nathan

உங்களுக்கு பொலிவான தோற்றத்தைத் தரும் ‘தக்காளி ஃபேஸ் பேக்’

nathan