32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
ஆண்களுக்கு

வெட் ஷேவிங் Vs ட்ரை ஷேவிங்: நன்மைகளும்… தீமைகளும்…

ஆண்களின் தினசரி செயல்பாடுகளில் ஒன்று தான் ஷேவிங். இதில் வெட் ஷேவிங், ட்ரை ஷேவிங் என இரு முறைகள் உள்ளன. ஒவ்வொன்றும் நன்மைகளையும், தீமைகளையும் கொண்டுள்ளது.

உங்களுக்கு இவற்றில் எது சிறந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு ட்ரை ஷேவிங் மற்றும் வெட் ஷேவிங்க்கின் நன்மைகள் மற்றும் தீமைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வெட் ஷேவிங்

வெட் ஷேவிங் முறையில் ரேசர், சோப்பு அல்லது க்ரீம்கள் பயன்படுத்தப்படும். இது தான் பழங்காலம் முதலாக ஆண்கள் பின்பற்றி வரும் முறை. இன்றும் பல ஆண்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகிறார்கள்.

நன்மைகள்

வெட் ஷேவிங் செய்வதான் மூலம் தாடியை முழுமையாக நீக்கலாம். மேலும் இம்முறையின் மூலம் ஷேவிங் செய்வதால் கன்னங்கள் மென்மையாக இருக்கும்.

வெட் ஷேவிங்

சிறந்தது ஏனெனில்… பெரும்பாலான ஆண்கள் இம்முறையை தேர்ந்தெடுப்பதற்கு காரணம், இம்முறையினால் ஷேவிங் செய்த பின் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும் என்பதால் தான். மேலும் வெட் ஷேவிங் முடியை மட்டும் நீக்குவதோடு, இறந்த செல்களையும் நீக்கி பொலிவோடு காட்டுகிறது.

தீமைகள்

வெட் ஷேவிங் மூலம் வெட்டுக் காயங்களை சந்திக்கக்கூடும். அதுமட்டுமின்றி, சோப்பு அல்லது க்ரீம்களைப் பயன்படுத்துவதால் அரிப்பு மற்றும் எரிச்சல்களை உண்டாக்கும். முக்கியமாக வெட் ஷேவிங் செய்ய நீண்ட நேரம் ஆகும்.

ட்ரை ஷேவிங்

ட்ரை ஷேவிங் எலக்ட்ரிக் ஷேவர் மூலம் செய்யப்படுவதாகும். இம்முறைக்கு சோப்பு அல்லது க்ரீம் எதுவும் தேவை இல்லை. பெரும்பாலான இளம் தலைமுறை ஆண்கள் இதனையே பின்பற்றுகின்றனர்.

நன்மைகள்

ட்ரை ஷேவிங் செய்வதால் எவ்வித காயங்களும் ஏற்படாது. மேலும் வெட் ஷேவிங்கை விட இதனை மிகவும் வேகமாக செய்துவிடலாம்.

தீமைகள்

எலக்ட்ரிக் ஷேவர் சற்று விலை அதிகமானது. அதுவும் நல்ல தரமான எலக்ட்ரிக் ஷேவர் குறைந்தது 2500 ரூபாய் இருக்கும். தரமற்றதை வாங்கிப் பயன்படுத்தினால் சருமம் மோசமானதாக காணப்படும்.

Related posts

ஆண்களே! ஹேண்ட்சம் பாய் போல காட்சியளிக்க சில சிம்பிளான வழிகள்!!!

nathan

ஆண் தன்னுடைய வாழ்க்கைத்துணையிடம் சொல்ல விரும்புகிறான் !..சுவாரஸ்யமான கட்டுரை

nathan

முடியின் வளர்ச்சி நேராகவும், நீளமாகவும் உள்ளதென்றால் இந்த டிப்ஸ் உங்களுக்கு தான் நண்பர்களே!…

sangika

ஆண்களே…மனம் தளர வேண்டாம்!

nathan

முக வாட்டத்திற்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்!….

sangika

ஒருவர் எப்படிபட்ட பெண் ணை மணந்துகொண்டால் அவர் அதிர்ஷ்டசாலியாக வாய்ப்புள்ளது தெரியுமா?

sangika

ஆண்களின் கவனத்துக்கு! ஆயுர்வேதம் சொல்லும் 8 அறிவுரைகள்!

nathan

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்…! அழகாக்கும் ஆயுர்வேதம்! ~ பெட்டகம்

nathan

தாடியின் வளர்ச்சியை வேகமாக தூண்டும் சில எளிய இயற்கை வழிகள்!!!

nathan