உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் புனித நீராடினார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரக்யராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்த முறை, மகா கும்பமேளா கடந்த மாதம் 12 ஆம் தேதி தொடங்கியது. கும்பமேளா இம்மாதம் 26 ஆம் தேதி வரை தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும். இந்த நிகழ்வில் உத்தரபிரதேசத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளனர்.
அவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி சடங்குகளைச் செய்கிறார்கள். அரசாங்கம் வழங்கிய தகவல்களின்படி, கும்பமேளா தொடங்கிய 29 நாட்களில், சுமார் 45 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இன்று தனது குடும்பத்தினருடன் பிரயாக்ராஜுக்குச் சென்று மகா கும்பமேளாவின் போது திருவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
இதையும் படியுங்கள் – “மாணவர்கள் ரோபோக்கள் அல்ல, புத்தகங்களில் மட்டும் மூழ்கிவிடாதீர்கள்” – பிரதமர் மோடியின் அறிவுரை!
முகேஷ் அம்பானி, அவரது தாயார் கோகிலா பென் அம்பானி, மகன்கள் ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி, மருமகள்கள் ஸ்லோகா மெர்ச்சன்ட் மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் உள்ளிட்டோர் புனித நீராடினர். முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம் பிரயாக்ராஜை அடைந்து, அங்கிருந்து திருவேணி சங்கமத்திற்கு காரில் சென்றனர்.