பண்டிகை இல்லாவிட்டாலும், நேற்று (பிப்ரவரி 6) தமிழகம் பண்டிகைக் கோலத்தில் இருந்தது.
காரணம், நடிகர் அஜித்தின் ‘ விடாமுயற்சி’ திரைப்படம் உலகம் முழுவதும் 3,650க்கும் மேற்பட்ட திரைகளிலும், தமிழ்நாட்டில் மட்டும் 900க்கும் மேற்பட்ட திரைகளிலும் வெளியாகியுள்ளது.
அஜித், த்ரிஷா, ஆரவ், அர்ஜுன் மற்றும் ரெஜினா ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
படத்தில் இடம்பெற்ற Sawadeeka பாடலுக்கு ஆட்டம் போடாத, ரீல்ஸ் செய்யாத அஜித் ரசிகர்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.
இலங்கை
தமிழகத்தில் முதல் நாளில் ரூ. 30 கோடிக்கு மேல் வசூலித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் மொத்தமாக உலகம் முழுவதும் ரூ. 55 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது.இலங்கையில் முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி இந்திய மதிப்பில் ரூ. 36 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.