30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
LglZaDa
எடை குறைய

அழகான உடலமைப்பை பெறவேண்டுமா?azhagu kuripugal

அழகாகவும் இளமையாகவும் இருக்கவேண்டும் என்ற ஆசை எல்லா பெண்களுக்குமே உண்டு. அந்த அழகு மட்டும் போதாது. உடலும் அம்சமாக இருந்தால்தான் அழகாக ஜொலிக்க முடியும்.

சத்தான உணவு இல்லாததால் ஒல்லியான தேகத்துடன் காணப்படுவோரையும், அளவுக்கு அதிகமாக சத்தான உணவுகளை சாப்பிட்டு குண்டாக இருப்போரையும் அழகானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. நீங்களும் அழகான அம்சமான உடல் அழகை பெறவேண்டுமா? பொறுமையாக தொடர்ந்து படியுங்கள். பொறுமையைக் கடைப்பிடிப்பதும் அழகுக்கும் இளமைக்கும் உதவும் என்கிறது ஆய்வுகள்.

இந்தியாவை பொறுத்தவரை வளர் இளம்பெண்கள் அதிக அளவில் சத்துக்குறைப்பாட்டுக்கு ஆளாகிறார்கள். இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்குறைபாடு இவர்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி என்று கருதப்படும் தியாமின் ஆகியவற்றின் குறைபாடும் ஒரளவுக்கு இருக்கிறது. வளர் இளம்பெண்கள் எடையை குறைப்பதே பற்றியே கவலைப்படுவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

எடையை குறைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறதோ இல்லையோ, இவர்கள் அதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். வளர் இளம் பருவம் என்பது 13 முதல் 17 வயது வரையுள்ள பெண்களை குறிக்கும். இவர்கள் உடலில் வேகமான வளர்ச்சி 9 1/2 வயதில் தொடங்கி 13 1/2 ஆண்டுகள் வரை தொடர்கிறது. பொதுவாக ஒரு பெண் சராசரியாக 12 1/2 வயதில் பூப்பெய்துகிறாள். அவளது உடலில் பெரிய அளவிலான வளர்ச்சி 19 வயதுக்குள் முடிந்துவிடுகிறது.

இவர்களுக்கான சத்தான உணவு பரிந்துரைகளின் பட்டியல் 10 முதல் 12 வயது, 13-15 வயது, 16- 18 வயது என்ற 3 பிரிவுகளாக உள்ளது. வளர் இளம் பருவம் ஆரம்பிக்கும் சமயத்தில், சாதாரண உயரத்தில் 80 முதல் 85 சதவீதத்தையும் பொதுவான எடையில் 53 சதவீதத்தையும் உடல் அமைப்பின் வளர்ச்சியில் 52 சதவீதத்தையும் எட்டியிருப்பார்கள்.

அந்த வளர்அளம் பருவத்தின் நிறைவில் இவர்களின் இருமடங்காக உயரக்கூடும் உயரம் 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும். கொழுப்பற்ற எடையில் 22 முதல் 42 கிலோ வரையும் கொழுப்பு 5 முதல் 14 கிலோ வரையும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

உணவு மற்றும் சத்து விஷயங்களில் ஆர்வம் காட்டாமல் இருத்தல் பெற்றோரின் உணவு பழக்கத்தில் இருந்து மாறுபட்ட உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்று கருதுதல். இவர்கள் பின்பற்றும் மேலும் சில பழக்கவழக்கங்களும் அவர்களது உடல் சக்தியை குறைத்து விடுகின்றன.

சாப்பாட்டை குறிப்பாக காலை உணவை தவிர்ப்பது நொறுக்குத் தீனிகள், இனிப்புகளை அதிகம் சாப்பிடுவது, சாப்பிட தயார் நிலையில் விற்க்கப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவது மற்றும் அதை வேகமாக சாப்பிடுவது குடும்பத்தில் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாத வழக்கத்துக்கு மாறான கலப்பில் உணவு சாப்பிடுவது உணவு வகைகள் மீது விருப்பு – வெறுப்பு காட்டுதல், பாட்டில்களில் அடைத்து விற்க்கப்படும் குளிர்பானங்களை அதிக அளவில் குடிப்பது, மது அருந்துதல் ஆகியவை அந் பழக்க வழக்கங்களில் இடம் பெறுகின்றன. அதனால் வளம் இள்பெண்கள் சத்தான உணவுகளை கண்டிப்பாக சாப்பிடவேண்டும் என்பது சத்துணவு நிபுணர்களின் கருத்து. களை மாற்றி உட்கொள்ளவேண்டும். பூப்பெய்தும் காலத்தை கணிப்பது மற்றும் கருத்தடை மருத்து பயன்படுத்துவது பற்றிய விவரங்களை கேட்டறிந்து அதற்கேற்ற உணவு வகைகளை தேர்ந்தேடுக்க வேண்டும்.

இரும்புசத்து குறைபாடு இருந்தால் அதை சரிசெய்ய வேண்டும். அதை வராமலும் தடுக்கவேண்டும். உடல் எடை கூடுகிறதா அல்லது குறைகிறதா என்பதை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். தினமும் சாராசரியாக 2 ஆயிரம் முதல் 2500 கலோரி வரையில் சத்து கிடைக்கும் வகையில் உணவு வகைகளை அவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும். சத்து குறைவான உணவு மற்றும் வழக்கத்துக்கு மாறான உணவு சாப்பிடும் விவரங்களை கண்டறிவதும் சாப்பிடுவதில் உள்ள குறைகளை மனரீதியாக கண்டறிந்து அதற்கேற்ற உணவு வகைகளை பரிந்துரைப்பதும் அவசியமான ஒன்றுதான்.

மேலும் உடலுக்கு தேவையான சத்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நம்பகமான வழிமுறைகளை உருவாக்கி அதை பின்பற்ற வேண்டும். அதற்காக பலவகையான உணவு சாப்பிடுவது ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது குறைவான கொழுப்பு சத்து கொண்ட உணவு வகைகளை தேர்வு செய்து காய்கறிகள், பழங்கள், தானியங்களை அதிகமாக சாப்பிடுவது கனிசமான அளவுக்கு சர்க்கரை மற்றும் சோடியம் உள்ள உணவை சாப்பிடுவது போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.

உணவு அல்லது வழக்கத்துக்கு மாறான உணவு சாப்பிடும் விரவங்களை கண்டறிவதும் சாப்பிடுவதில் உள்ள குறைகளை மனரீதியாக கண்டறிந்து அதற்கேற்ற உணவ] வகைகளை பரிந்துரைப்பதும் அவசியமான ஒன்றாகும். மேலும் உடலுக்கு தேவையான சத்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நம்பகமான வழிமுறைகளை உருவாக்கி அதை பின்பற்றவேண்டும்.LglZaDa

Related posts

உங்களுக்கு தெரியுமா வெங்காயத்தை வைத்து ஒரே வாரத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்!

nathan

தொடையில் உள்ள அதிக சதைகளை குறைக்க எளிய வழி

nathan

உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

மீண்டும் ஏற்படும் கொழுப்பை நீக்க 5 சுலபமான வழிகள்

nathan

ஒரே வாரத்தில் உடல் எடையைக் குறைக்க அன்னாசிப்பழம் டயட் ஃபாலோ பண்ணுங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆய்வுகளில் நிரூபணம் செய்யப்பட்ட சில எடை இழப்பு குறிப்புகள்!

nathan

உணவைத் தவிர்த்தாலும் எடை அதிகரிக்க என்ன காரணம்?

nathan

அடிவயிற்றுக் கொழுப்பை வேகமாக கரைக்கணுமா? அப்ப இந்த பச்சை நிற உணவுகளை சாப்பிடுங்க…

nathan

நீங்கள் டயட் இல்லாமல் மிக விரைஎடையை குறைக்க வேண்டுமா? வாக உடல்

nathan