27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
மாலை வேளையில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!
உடல் பயிற்சி

மாலை வேளையில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பலரும் காலையில் உடற்பயிற்சி செய்தால் மட்டும் தான் நன்மைகளைப் பெற முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் மாலையில் உடற்பயிற்சியில் ஈடுபடுவதால், இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா? ஆம், சிலருக்கு காலையில் எழுந்து அலுவலகம் கிளம்பவே நேரம் இருக்காது. அத்தகையவர்கள் மாலையில் உடற்பயிற்சி செய்யலாமா கூடாதா என்ற சந்தேகத்துடனேயே இருப்பார்கள்.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை மாலையில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக காலையில் உடற்பயிற்சி செய்வதை விட, மாலையில் உடற்பயிற்சி செய்வது நல்லது என்று உடல்நல நிபுணர்களும் கூறுகின்றனர்.

நல்ல தூக்கம் கிடைக்கும்

மாலையில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று, இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். ஆனால் உடற்பயிற்சிக்கும், தூக்கத்திற்கும் இடையே போதிய இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், தூக்கம் தான் பாழாகும்.

வார்ம் அப் நேரம் குறையும்

காலையில் உடற்பயிற்சி செய்யும் முன் வார்ம் அப் கட்டாயம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் தளர்ந்த தசைகள் சற்று உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு இறுகும். மேலும் அப்படி தசைகளை ஒருநிலைக்கு கொண்டு வர நீண்ட நேரம் வார்ம் அப் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் மாலையில் ஏற்கனவே உடல் தயாராக இருப்பதால், நீண்ட நேரம் வார்ம் அப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

காலையில் பொறுமையாக அலுவலகம் கிளம்பலாம்

மாலையில் உடற்பயிற்சி செய்து வந்தால், காலையில் டென்சனாகி அவசரமாக எதையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இதுவும் ஒரு நன்மை தானே!

அவசரம் இருக்காது

மாலையில் உடற்பயிற்சி செய்வதால், மற்ற வேலைகளால் அவசரமாக உடற்பயிற்சியை முடிக்க வேண்டிய அவசியமில்லை. பொறுமையாகவும், நிதானமாகவும் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

மன அழுத்தம் நீங்கும

் அலுவலகத்தில் நாள் முழுவதும் வேலை செய்து, வீடு திரும்பி, பின் உடற்பயிற்சி செய்வதால், மன அழுத்தம் உடற்பயிற்சி செய்யும் போது பறந்தோடிவிடும். மேலும் இரவில் நல்ல தூக்கத்தையும் பெற முடியும்.

விரக்தியைப் போக்கலாம்

அலுவலகத்தில் யாரேனும் கடுப்பேற்றி, அதனால் விரக்தி அடைந்திருந்தால், அதனை வீட்டில் யாரிடம் காட்டி, அவர்களை காயப்படுத்தாமல், உடற்பயிற்சி கூடத்தில் எடை தூக்குதலின் மூலம் போக்கலாம்.

ஆற்றலுடன் பயிற்சி செய்யலாம்

காலையில் எழுந்ததும் எதையும் சாப்பிட பிடிக்காது. ஆனால் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால், ஆற்றலை அளிக்கும் ஏதேனும் உணவை கஷ்டப்பட்டு உட்கொள்ள வேண்டி வரும். ஆனால் மாலையில் என்றால் ஏதேனும் ஸ்நாக்ஸ் அல்லது புரோட்டீன் ஷேக்கை எடுத்துக் கொண்டு, உடற்பயிற்சியை நல்ல ஆற்றலுடன் தொடங்கலாம்.

உடல் ஒத்துழைப்பு

காலை வேளையை விட மாலை வேளையில் உடற்பயிற்சி செய்வதற்கு உடல் நன்கு ஒத்துழைப்பு தரும். இதனால் நன்கு உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.

Related posts

இடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி

nathan

தொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்க

nathan

தசைகளை உறுதியாகும் வார்ம் அப் பயிற்சிகள்

nathan

இடுப்பின் பக்கவாட்டு கொழுப்பை கரைக்க உதவும் பயிற்சிகள்

nathan

ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் கணேச முத்திரை

nathan

இடுப்பு சதையை குறைத்து உடலை ஃபிட்டாக்கும் எளிய பயிற்சி! – இதை நீங்களும் செய்யலாம்

nathan

தொப்பை குறைய எளிய பயிற்சி

nathan

இடுப்பு, தொடைக்கான பயிற்சிகள் !

nathan

இடை அழகுக்கு பயிற்சிகள்!

nathan