1462537890 5529
அசைவ வகைகள்

சில்லி பன்னீர் எவ்வாறு செய்வது?

தேவையான பொருட்கள்:

குடைமிளகாய் – 2
உருளைக்கிழங்கு – 1
பச்சை பட்டாணி – அரை கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பனீர் துண்டுகள் – 1 கப்
இஞ்சி விழுது – 1/4 தேக்கரண்டி
பூண்டு – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி
நெய் – 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
தண்ணீர் – 1 கப்
கொத்தமல்லி – சிறிதளவு

அரைக்க தேவையான பொருட்கள்:
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு.

மசாலா:
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பன்னீரை எண்ணெயில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அரைத்த விழுதை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை தீயை மிதமாக வைத்து வதக்கவும். அதில் மசாலா தூள் வகைகளை சேர்த்து வதக்கவும்.

அதன் பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி விடவும்.

பின்னர் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, விருப்பப்பட்டால் பட்டாணியும் சேர்த்து பிறகு இறுதியில் வறுத்த பன்னீர் துண்டுகளை போட்டு நன்றாக ஒரு முறை கிளறி மேலும் 2 நிமிடம் கழித்து இறக்கவும். மேலே கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.1462537890 5529

Related posts

கிராமத்து மீன் குழம்பு

nathan

பசலைக்கீரை முட்டை பொரியல்

nathan

சூப்பரான கணவாய் மீன் வறுவல்

nathan

இறால் மக்ரோனி : செய்முறைகளுடன்…!

nathan

அவித்த முட்டை பிரை

nathan

கேரளா முட்டை அவியல்

nathan

கிராமத்து ஸ்டைலில் கம கமக்கும் மீன் குழம்பு…

nathan

ஆட்டிறச்சி கறி

nathan

நாட்டுக்கோழி வறுவல் செய்ய வேண்டுமா?…

nathan