விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் கணிதத்துறை உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்த நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரை கூறி மாணவிகளிடம் தவறாக தவறாக வழிநடத்தியதாக ஆடியோ 2018 ஏப்ரலில் வெளியானது.
இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், 2018 ஏப்., 16ல், அருப்புக்கோட்டை போலீசார், நிர்மலாதேவியை கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரும், ஆராய்ச்சி மாணவருமான கருப்பசாமி கைது செய்யப்பட்டார்.