31.3 C
Chennai
Monday, Jun 17, 2024
1 coconut podi 1660217464
Other News

தேங்காய் மிளகாய் பொடி

தேவையான பொருட்கள்:

* துருவிய தேங்காய் -1 கப்

* உளுத்தம் பருப்பு – 1/4 கப்

* வரமிளகாய் – 10-15

* கடுகு – 1 டீஸ்பூன்

* பூண்டு – 3

* புளி – 1 சிறிய துண்டு

* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

* வெல்லம் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 1 டீஸ்பூன்1 coconut podi 1660217464

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக நிறம் மாற ஆரம்பிக்கும் போது, கடுகு, வரமிளகாய், பூண்டு, பெருங்காயத் தூள் மற்றும் புளி சேர்த்து, மிதமான தீயில் வைத்து நன்கு பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின் அதே வாணலியில் துருவிய தேங்காயை சேர்த்து குறைவான தீயில் வைத்து, அதில் உள்ள நீர் அனைத்தும் வற்றும் வரை வறுத்து இறக்கி, அதையும் குளிர வைக்க வேண்டும்.

* பின்பு வறுத்த பொருட்களுள் தேங்காயைத் தவிர அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் தேங்காய், வெல்லம் சேர்த்து, ஒருமுறை லேசாக அரைத்து இறக்கிவிட வேண்டும். (அதிகமாக அரைத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் அது பிசுபிசுவென்று மாறிவிடும்.)

* இப்போது அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறினால், தேங்காய் மிளகாய் பொடி தயார். இந்த பொடியை காற்றுப்புகாத ஜாரில் போட்டு சேமித்து வைத்து பயன்படுத்துங்கள்.

Related posts

மதுரை மக்களுக்கு கோடிகளில் உதவி செய்யும் 86 வயது வடக வியாபாரி!

nathan

அமலாபாலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காதலன்

nathan

இந்த ராசிக்காரங்களுக்கு குளிர்காலம் ரொம்ப பிடிக்குமாம்…

nathan

விஜய் சேதுபதி பட நடிகையை அடித்தே கொன்ற மகன்..!

nathan

வாழ்க்கையின் ஒரு அங்கம் மரணம்.. அது வரும்போது வரட்டும்,- கமல்ஹாசன்

nathan

அக்கா மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சைத்ரா

nathan

மனைவியுடன் -க்கு வெளிநாடு பறந்த நடிகர் ஆர்யா

nathan

மகனுடன் நடிகர் சரத்குமார் புகைப்படங்கள்

nathan

அடுத்தடுத்து 4 பேரை திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்..

nathan