30.2 C
Chennai
Thursday, Jul 31, 2025
2 tomatokurma 1663683613
Other News

சுவையான தக்காளி குருமா

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு…

* துருவிய தேங்காய் – 1/4 கப்

* பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்

* முந்திரி – 5

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

* மல்லி – 1 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் – 2

* தண்ணீர் – தேவையான அளவு

பிற பொருட்கள்…

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* பட்டை – 1/2 இன்ச்

* கறிவேப்பிலை – சிறிது

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 3 (பெரியது மற்றும் நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1/2 டீஸ்பூன்

* தண்ணீர் – தேவையான அளவு

* கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)2 tomatokurma 1663683613

செய்முறை:

* முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பட்டை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, அதைத் தொடர்ந்து தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

Tomato Kurma Recipe In Tamil
* பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சர்க்கரை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிய வதக்க வேண்டும்.

* பிறகு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி நன்கு கிளறி, மூடி வைத்து 15 நிமிடம் குறைவான தீயில் வைத்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான தக்காளி குருமா தயார்.

Related posts

மகனை கடத்திவிட்டதாக கணவர் மீது மனைவி காவல்நிலையத்தில் புகார்

nathan

‘புரட்சி தமிழன்’ சத்யராஜ் பிறந்தநாள் இன்று..

nathan

ஒரே வாரத்தில் நடந்த பிரேக்கப் – சஞ்சீவ் கூறிய ஷாக் தகவல்!

nathan

வாய்ப்பிளக்க வைத்த நடிகை நந்திதா..படுக்கையறை காட்சி!!

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் 5 நிமிடம் லிப்-கிஸ் கொடுப்பதால் பெறும் அற்புத நன்மைகள்!

nathan

கணவன் நாக்கை கடித்து துண்டாக்கிய மனைவி -லிப்-லாக்

nathan

தனுஷும் என் கணவரும் ஒரே படுக்கையில்!

nathan

இந்த ராசிகளுக்கு இனி ராஜயோகம்

nathan

பர்ஸில் பண புழக்கம் அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள் !

nathan