1 beetroot payasam 1663854466
ஆரோக்கியம் குறிப்புகள் OG

பீட்ரூட் பாயாசம்

தேவையான பொருட்கள்:
* பால் – 2 1/2 கப்

* நெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* உடைத்த முந்திரி – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* பீட்ரூட் – 1 கப் (துருவியது)

* ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்1 beetroot payasam 1663854466

செய்முறை:
* முதலில் பாலை அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Beetroot Payasam Recipe In Tamil
* பின்பு அதே வாணலியில் பீட்ரூட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அதன் பின் அதில் சர்க்கரையை சேர்த்து, சர்க்கரையை முற்றிலும் உருக வைக்க வேண்டும். சர்க்கரை உருகியதும், குளிர வைத்துள்ள பாலை ஊற்றி கிளறி குறைவான தீயில் வைத்து 10-12 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* இறுதியாக அதில் வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான பீட்ரூட் பாயாசம் தயார்.

குறிப்பு:
* பீட்ரூட்டின் பச்சை வாசனை போகாமல் சர்க்கரையை சேர்த்துவிடாதீர்கள்.

* பாயாசத்தின் சுவை இன்னும் தூக்கலாக இருக்க வேண்டுமானால், இறுதியாக ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

Related posts

சர்க்கரை நோய் முதல் உயர் இரத்த அழுத்தம் வரை குறைக்க சாலையோரம் பூக்கும் இந்த ஒரு பூ

nathan

மகத்துவம் நிறைந்த மண்பானை நீர்

nathan

ஒரு மாதத்தில் எடையைக் குறைக்க என்ன செய்வது?

nathan

ஆடாதொடை இலை மருத்துவ குணம்

nathan

கண் பார்வை குறைபாடு அறிகுறிகள்

nathan

ரோஜா இதழ் பொடி பயன்கள்

nathan

வாய்வழி புற்றுநோயின் பொதுவான குறிகாட்டிகள் – mouth cancer symptoms in tamil

nathan

கோபம் வராமல் இருக்க

nathan

வயிறு உப்புசம் அறிகுறிகள்

nathan