25.9 C
Chennai
Saturday, Mar 14, 2026
2 pineapple gojju1 1672650861
சமையல் குறிப்புகள்

சுவையான அன்னாசி மசாலா

தேவையான பொருட்கள்:

* அன்னாசி – 1 கப்

* புளிச்சாறு – 1/4 கப்

* வெல்லம் – 5 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

அரைப்பதற்கு…

* எள்ளு – 2 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் – 3 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்

* வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

* காஷ்மீரி வரமிளகாய் – 6

* கறிவேப்பிலை – சிறிது

* துருவிய தேங்காய் – 3/4 கப்

* தண்ணீர் – 1/2 கப்

தாளிப்பதற்கு…

* தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* வரமிளகாய் – 1

* கறிவேப்பிலை – சிறிது2 pineapple gojju1 1672650861

செய்முறை:

* முதலில் அன்னாசியை ஒரு வாணலியில் போட்டு, நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* அதே வேளையில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தேங்காய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

Pineapple Masala Recipe In Tamil
* அன்னாசி வெந்ததும், அதில் புளிச்சாறு, வெல்லம், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து, 15 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.

* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சப்ஜியுடன் சேர்த்து கிளறினால், சுவையான அன்னாசி மசாலா தயார்.

Related posts

முந்திரி வெஜிடேபிள் குருமா

nathan

ருசியான அவல் கார பொங்கல்!….

sangika

பருப்பில்லாத இன்ஸ்டன்ட் சாம்பார்

nathan

வீட்டிலேயே பன்னீர் செய்வது எப்படி?

nathan

பன்னீர் பெப்பர் ப்ரை

nathan

காரசாரமான… சில்லி ராஜ்மா

nathan

தக்காளி குழம்பு

nathan

சூப்பரான வெங்காய போண்டா

nathan

சூப்பரான மொறு மொறு தோசை

nathan