31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

அர்ஜூனா விருது பெற்ற செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி!

அர்ஜுனா விருது, கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது மற்றும் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது ஆகியவை ஆண்டுதோறும் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண் வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருது, கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது மற்றும் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகளுக்கான வீரர்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

உலகக் கோப்பை வீரர் முகமது ஷமி, செஸ் வீராங்கனை வைஷாலி, ஹாக்கி வீரர் கிரிஷன் பகதூர் பதக், ஹாக்கி வீராங்கனை சுஷிலா சானு உள்ளிட்ட 26 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டது.

இதேபோல் தமிழக செஸ் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ்க்கு துரோணாச்சார்யா விருதும், தமிழகத்தை சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.

 

இந்நிலையில்தான் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இந்திய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி  கலந்து கொண்டு வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

 

அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலியும் அர்ஜுனா விருதை வென்றார். வில்வித்தை, ஹாக்கி, தடகளம், செஸ், பூப்பந்து, குதிரையேற்றம், கோல்ஃப், கபடி, ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ் மற்றும் பாராகானோயிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

Related posts

இதுவரை யாரும் கண்டிராத லுக்கில் லாஸ்லியா

nathan

மனைவி போட்ட ஸ்கெட்ச் – குழந்தை இல்லை -திருமணம் ஆகி 26 வருடம் ஆச்சு..

nathan

கோடி கோடியாய் சொத்து சேர்த்து வைத்திருக்கும் தமன்னா

nathan

ரஜினியுடன் இருக்கும் இந்த குழந்தை யார் என்று தெரியுதா?

nathan

தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க..!பிரசாந்த் ஏறாத குதிரையே இல்ல..”

nathan

சளைக்காமல் அடுத்தடுத்து சாதிக்கும் மாணவர்கள்!மலை கிராம மாணவிக்கு மருத்துவ சீட்டு

nathan

மனைவியுடன் நடந்து சென்ற போது புதுமாப்பிள்ளைக்கு உயிரிழந்த சோகம்!!

nathan

கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி மாற்றுத்திறனாளி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த ரோஜா!

nathan

ஜெயிலர் படத்தை பார்த்து தலைவா என்று கத்திய எ.எல் விஜய் மகன் – வீடியோ

nathan