36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

மாங்காய் இனிப்பு பச்சடி

தேவையான பொருள்கள்:

மாங்காய் – 1
வெல்லம் – 2

தாளிக்க:

எண்ணெய் – 2 டேபில் ஸ்பூன்
கடுகு – சிறிது
உளுந்து – சிறிது
மிளகாய் தூள் – 2
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – சிறிதளவு

செய்முறை:

மாங்காய் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதித்ததும் வெல்லத்தை சேர்த்து பாகு செய்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.

முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, மிளகாய் தூள், கறிவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய மாங்காய் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும். அதனுடன் சிறிது உப்பு சேர்க்கவும்.

மாங்காய் முக்கால் பாகம் வெந்தவுடன் பாகு செய்த வைத்துள்ள வெல்லதை சேர்க்கவும். வெல்லம் கரைந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

மாங்காய் அரைப் பழமாக இருந்தாலே போதுமானது. வெல்லத்தை மாங்காயின் இனிப்பிற்கேற்ப கூடுதலாகவோ குறைச்சலாகவோ சேர்த்துக்கொள்ளவும்.

மாங்காயின் புளிப்பு, உப்பு, காரம், இனிப்பு என அனைத்து சுவைகளும் சேர்ந்து அருமையான சுவையாக இந்த மாங்காய் இனிப்பி பச்சடி இருக்கும்.

Related posts

ஸ்வீட் கார்ன் சுண்டல் செய்வது எப்படி

nathan

முட்டை கொத்து ரொட்டி

nathan

தினை உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

வெந்தய தயிர் பச்சடி

nathan

பன்னீர் போண்டா செய்முறை விளக்கம்

nathan

சிம்பிளான. சீஸ் மக்ரோனி

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் கட்லெட்

nathan

மோர் ஓட்ஸ் கொழுக்கட்டை

nathan

வெரைட்டியாக ருசிக்க… 30 வகை உருளைக்கிழங்கு சமையல்

nathan