33.9 C
Chennai
Wednesday, Jun 26, 2024
14 1431579113
மருத்துவ குறிப்பு

எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் பழக்கவழக்கங்கள்!!!

நம் உடலுக்கு மிகப்பெரிய ஆதரவு அமைப்பாக எலும்புகள் செயல்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆரோக்கியமான எலும்புகள் இல்லாத பட்சத்தில் நீங்கள் ஒரே இடத்தில் அடைந்து போவீர்கள்; உங்கள் நடமாட்டத்திற்கு அது தடையாய் நிற்கும்; தரமான வாழ்க்கையை உங்களால் வாழ்ந்திட முடியாமல் போகும்.

எலும்புகள் வலுவிழந்து போவதற்கும், கால்சியம் சத்தை இழப்பதற்கும் பல காரணிகள் உள்ளது. பொதுவாக பெண்களின் எலும்புகள் தான் வேகமாக வலுவிழக்கும். பெண்களின் இறுதி மாதவிடாய்க்கு பிறகு ஏற்படும் ஹார்மோன் சமமின்மையின் காரணமாக அவர்கள் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு தேய்வு நோயால் அவதிப்படுவார்கள். இருப்பினும், இதற்கு பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. இருப்பினும் இந்த நிலை உங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதை விட அதனை தடுப்பது தான் புத்திசாலித்தனம்.

பெரியவர்கள் ஆன பிறகு எலும்புகளில் பாதிப்புகள் ஏற்படுவதற்கு உங்கள் வாழ்க்கை முறையும் கூட முக்கிய பங்கை வகிக்கிறது. இளம் வயதிலேயே எலும்பு தேய்வு மற்றும் முறியக்கூடிய எலும்புகளை பெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கின்ற வகையில் நாம் சில பழக்கவழக்கங்களை பின்பற்றி வருவோம். எலும்புகளுக்காக ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவதை தவிர, இன்னும் பிற ஆரோக்கியமான பழக்கவழக்கங்களையும் நாம் பின்பற்ற வேண்டும்.

எலும்புகளின் பலவீனமாகும் நிலையை கருதி, சில பழக்கவழக்கங்களை பற்றி உங்களிடம் பகிர போகிறோம். அவைகளை பின்பற்றினால் உங்கள் எலும்புகள் பலவீனமாக போவது உறுதி.

இதனை படித்த பிறகு, ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தை நிறுத்தி விடுவீர்கள் என நாங்கள் நம்புகிறோம். உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு நீங்கள் உடனடியாக நிறுத்த வேண்டிய சில தீய பழக்கவழக்கங்கள் உள்ளது. அவைகளைப் பற்றி பார்க்கலாமா?

தவறான தோரணையில் அமர்வது

தரையில் நீண்ட நேரம் அமர்ந்தால் உங்கள் கால் மூட்டுகளில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும். அதற்கு காரணம் அவைகள் அடிக்கடி தேய்மானத்திற்கு ஆளாவது தான்.

மீன் மற்றும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருத்தல்

பால், தயிர், மீன் (சால்மன் மற்றும் மத்தி மீன்கள்) போன்ற கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்து வருபவர்களுக்கு எலும்பு அடர்த்தி இழப்பு மற்றும் எலும்பு வழுவிழந்து போகும் இடர்பாடு அதிகமாக இருக்கும். அவர்கள் எல்லாம் லேசாக கீழே விழுந்தாலே எலும்பு உடைவு ஏற்படும். அதனால் உங்கள் அன்றாட உணவில் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து உங்கள் எலும்புகளை காத்திடுங்கள். கால்சியம் கலந்த மாத்திரை மருந்துகளை விட இவை சிறப்பாக செயல்படும்.

மிதமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல்

உடற்பயிற்சிகளுக்கு எல்லாம் நேரம் இல்லையா? தினமும் 15 நிமிடங்கள் மட்டுமே நடை கொடுத்தாலே போதுமானது தான். திடமாக இருக்கும் உங்கள் மூட்டு எலும்புகள் நீட்சியடைய சில நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். இப்படி செய்வதால் மூட்டு எலும்புகளின் உராய்வு குறைந்து, எலும்புகளும் மூட்டு வலிகளும் தீரும். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

சூரிய ஒளியின் கீழ் அமராமல் போதல்

இந்தியாவில் காஷ்மீர் போன்ற பல மாநிலங்களில் அடர்ந்த மேகங்களை தாண்டி சூரிய ஒளி மிக அரிதாகவே வெளிவரும். அதனால் சூரியனில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி-யின் பயன்களை நம்மால் பெற முடிவதில்லை. சூரியன் ஒளி வீசுகின்ற போது வெளியே சென்று சில நேரம் அமருங்கள். இதனால் உங்களுக்கு கிடைக்கும் வைட்டமின் டி எலும்புகளை வலு பெறச்செய்யும்.

தைராய்டு மருந்துகள்

ஹைப்போ தைராய்டிசிம் போன்ற தைராய்டு கோளாறினால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? அப்படியானால் எலும்புகள் வலுவிழக்கும் இடர்பாடு உங்களுக்கு அதிகமாக உள்ளது. தைராய்டு கோளாறுக்காக நீங்கள் உண்ணும் மருந்துகளின் பக்க விளைவு என்ன தெரியுமா? அவை உங்கள் எலும்புகளில் இருந்து கால்சியத்தை எடுத்து விடும். அதனால் தைராய்டு மருந்துகள் எடுத்துக் கொண்டால், 5 மணி நேரத்திற்கு பிறகு கால்சியம் மாத்திரையையும் உண்ணுங்கள்.

அதிகமாக உப்பை சேர்த்தல்

உடலில் உள்ள கால்சியத்தை சிறுநீர் வாயிலாக நீக்கும் திறனை கொண்டுள்ளது உப்பு. அதனால் உப்பு அதிகமாக இருக்கும் பதப்படுத்தப்பட்ட மற்றும் ஜங்க் உணவுகளை உட்கொள்ளும் பழக்கத்தை நீங்கள் கொண்டிருந்தால், அதனை குறைத்திடுங்கள். இல்லையென்றால் எலும்புகள் வலுவிழக்கும். மேலும் அன்றாடம் உண்ணும் உணவுகளிலும் கூட உப்பின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். சந்தையில் கிடைக்கும் குறைவான சோடியத்தை கொண்ட உப்பை பயன்படுத்துங்கள். எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும் பழக்க வழக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.

அறிகுறிகளை கவனிக்காமல் விடுதல்

ஏதாவது தவறாக நடக்க போகிறது என்றால் உங்கள் உடல் எப்போதுமே அதற்கான அறிகுறியை காட்டிவிடும். எலும்புகளில் ஏதாவது பிரச்சனை என்றால் நீங்கள் எழுந்திருக்கும் போதோ அல்லது நடக்கும் போது ஒரு வித வலியை ஏற்படுத்த தொடங்கிவிடும். அப்படியானால் உங்களுக்கு கால்சியம் குறைபாடு உள்ளது என அர்த்தமாகும். கீழ் முதுகில் வலி இருந்து, அதனை நடக்கும் போது நீங்கள் உணர்ந்தால், எலும்புகள் வழு இழப்பதற்கான அறிகுறிகளில் இவைகளும் ஒன்றாகும்.

உடல் பருமன்

உடல் பருமன் பல வித உடல்நல ஆபத்துக்களை ஏற்படுத்தும். இந்த ஆபத்துகளில் ஒன்று தான் எலும்புகளுக்கு ஏற்படும் ஆபத்து. உங்களுக்கு உடல் பருமன் பிரச்சனை என்றால் உடலில் உள்ள அதிகமான எடை கால்களின் மீது தான் தாங்கி நிற்கும். இதனால் மூட்டுக்களில் பாதிப்பு ஏற்பட்டு, எலும்புகள் வலுவிழக்கும். எலும்புகள் மற்றும் இதயத்தின் நன்மையை கருதி உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அழுத்தம்

ஆம், மன அழுத்தமும் கூட ஒரு வகையில் எலும்புகள் மற்றும் மூட்டுக்களை வலுவிழக்கச் செய்யும். எப்போதுமே மன அழுத்தத்துடன் செயல்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவிழக்கும். இது மறைமுகமாக உங்கள் எலும்புகளையும் பாதிக்கும். நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் இரைப்பை பாதையில் இருந்து இரத்ததிற்கு செல்லும் போது, கால்சியம் உறிஞ்சப்படும். இதனால் எலும்புகள் வலுவிழக்கும்.

கால்சியம் மற்றும் வைட்டமின் டி-யை ஒன்றாக எடுத்துக் கொள்ளுங்கள்

நீங்கள் வெறுமனே கால்சியம் மாத்திரை மட்டுமே எடுத்துக் கொண்டால், வைட்டமின் டி உதவியில்லாமல் அது உறிஞ்சப்படாது. அதனால் கால்சியம் மாத்திரையோடு வைட்டமின் டி-யையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

14 1431579113

Related posts

உங்கள் கவனத்துக்கு மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு பதிவு..

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!

nathan

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினை

nathan

உங்களுக்கு ரெட்டை குழந்தை எப்படி உருவாகும்னு தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

நீங்க வெஜிடேரியனா? அப்ப நீங்க ரொம்ப நாள் உயிர் வாழ்வீங்க…

nathan

பதற வைக்கும் தகவல்! இந்த வினோத அறிகுறிகள் உடலில் இருந்தால் உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது..!

nathan

தொண்டையை பாதுகாக்க 10 வழிகள்

nathan

மூட்டு வலிக்கு உடனடி நிவாரணம் – A home remedy for joint pain

nathan

வயிறு கோளாறுகளை நீக்கும் ரோஜா ‘குல்கந்து’

nathan