தேவையான பொருட்கள்:
* காளான் – 20
* வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் – 1
* பூண்டு – 4 பல்
* ஆரிகனோ – 1 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* பிரஷ் க்ரீம் – 1/4 கப்
* சீஸ் – 1/4 கப் (துருவியது)
* பார்ஸ்லி/கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பிரட் துண்டுகள் – தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வெங்காயத்தை நன்கு பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் காளானை நன்கு நீரில் கழுவி சுத்தம் செய்து, பேப்பர் டவலில் வைத்து உலர்த்த வேண்டும். பின்பு அதை துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பூண்டு பற்களை எடுத்து அதை மிகவும் பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும். சீஸை துருவி வைத்துக் கெள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயைப் போட்டு உருக்கிக் கொள்ள வேண்டும்.
Creamy Mushroom Toast Recipe In Tamil
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு சிறிது நிறம் மாற வதக்க வேண்டும். பின் அதில் காளானைப் போட்டு உயர் தீயில் வைத்து 4-5 நிமிடம் நன்கு காளானில் இருந்து நீர் வற்றும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பூண்டு, ஆரிகனோ, சில்லி ப்ளேக்ஸ் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். ஒருவேளை அடிபிடிப்பது போன்று இருந்தால், சிறிது நீரைத் தெளித்துக் கொள்ளுங்கள்.
* பின்பு அதில் பிரஷ் க்ரீம் மற்றும் துருவிய சீஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இறுதியாக அதில் பார்ஸ்லி/கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்க வேண்டும். இப்போது க்ரீமி காளான் தயார்.
* அடுத்து பிரட் துண்டுகளை எடுத்து, முன்னும், பின்னும் வெண்ணெய் தடவி தோசைக்கல்லில் போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது பிரட் டோஸ்ட் தயார்.
* இறுதியாக பிரட் டோஸ்ட்டின் மேல் தயாரித்த க்ரீமி காளானை வைத்து பரிமாறினால், க்ரீமி மஸ்ரூம் டோஸ்ட் தயார்.