qq6023 1
Other News

பதிவாளர் அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி திடீர் தர்ணா : வெளியான தகவல்!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பெரியதாரா பகுதியை சேர்ந்தவர் ஜோஷி. நர்சிங் படிப்பை முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அவரைப் போலவே மருத்துவமனையில் பணிபுரிந்த கலைவாணனும் காதலித்து வந்தார்.

 

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெரியோர்கள் சம்மதத்துடன் செப்டம்பர் 13ம் தேதி பெரியதாராவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

 

இதையடுத்து தட்டார்மடம் அருகே கொம்மட்டிக்கோட்டையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமண சான்றிதழ் கோரி விண்ணப்பித்தனர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஜோஷி, கலைவாணன் இருவரும் கொம்மட்டிக்கோட்டை பதிவு அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

உளவுத்துறை போலீசார் அங்கு விரைந்து வந்து காதல் ஜோடியை அழைத்து சமாதானம் செய்தனர். பதிவாளரிடம் அழைத்துச் சென்று சான்றிதழ் வழங்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் விரைவில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பதிவாளர் உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

Related posts

2025-ல் பாபா வாங்கா கணிப்பு– பண மழை பொழியும்

nathan

சென்னையில் இருந்து திருச்சிக்கு வெறும் 25 நிமிடத்தில் செல்லலாம்…

nathan

BMW கார் வாங்கிய இயக்கினார் லோகேஷ் கனகராஜ்!

nathan

சோகமான செய்தி! ரஜினி ரசிகர்களுக்கு

nathan

அண்ணியை கரெக்ட் செய்ய நினைத்த கொழுந்தன்…

nathan

புடவையில் அசத்தும் திரிஷா

nathan

எம்.குமரன் படத்தில் நான் வாங்கிய சம்பளம் -பகிர்ந்த விஜய் சேதுபதி.

nathan

பிக்பாஸ் 7 போட்டியாளர் திடீரென மருத்துவமனையில் அனுமதி

nathan

ரஞ்சிதா மீது அதிருப்தியில் கைலாசா சீடர்கள் !

nathan