27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
1820358 3
Other News

‘லியோ’ படக்குழுவிற்கு மாரி செல்வராஜ் வாழ்த்து!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த “லியோ’ படம் கடந்த 19ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பல திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததால் `லியோ’ திரைப்படம் வசூலில் சாதனை படைக்கலாம் என திரையுலக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ‘லியோ’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ 148.5 கோடி வசூலித்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.

லியோ படக்குழுவினருக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில், “இயக்குனர் லோகேஷ் மற்றும் நடிகர் விஜய் மீண்டும் திரையில் இணைந்ததில் மகிழ்ச்சி!! லியோ உண்மையிலேயே திகிலூட்டும்!! லியோ டீமுக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

nathan

மனைவி சயீஷா உடன் வெளிநாட்டில் நடிகர் ஆர்யா

nathan

பித்தம் குறைய வீட்டு மருத்துவம்

nathan

ராகவா லாரன்ஸை அறிமுகப்படுத்திய இயக்குனர் மரணம்

nathan

விஜய்யுடன் சஞ்சய் பேசுவது இல்லை?லைகா வாய்ப்பை கைப்பற்றியது எப்படி!

nathan

விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சினிமா நடிகர்கள்

nathan

அந்த இடத்தில் புதிய டாட்டூ குத்தியுள்ள நடிகை திரிஷா

nathan

கத்திரிக்காயை அடிக்கடி சாப்பிடுவதால் என்ன நன்மைகள்

nathan

விஜய்க்கு வாழ்க்கை கொடுத்த விஜயகாந்த்.. நன்றி மறந்தாரா விஜய்..

nathan