உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வகைகளில் மருந்தாகும் நல்லெண்ணெய்.
உடல் ஆரோக்கியத்திற்கு மருந்தாகும் நல்லெண்ணெய் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். மனதிற்கு நல்ல மகிழ்ச்சியுண்டாகும். நல்ல தேகபுஷ்டி உண்டாகும். நல்ல பலம் உண்டாகும். உடலில் நல்ல ஒளியுண்டாகும். வாலிபத் தன்மை என்றும் நிலைத்திருக்கும். கண்கள் சம்பந்தப்பட்ட நோய், செவி நோய், கபால அழல்நோய் காச நோய் மட்டுமன்றி உடல் புண்களும் குணமாகும்.
ஆண்களைப் பொறுத்தவரையில் சனியும் புதனும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பெண்களைப் பொறுத்தவரையில் செவ்வாயும் வெள்ளியும் கட்டாயம் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
அதிகாலையில் எண்ணெய் தேய்த்து சூரிய உதயத்திற்கு முன்னால் குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்துக் கொண்டதும் உடனே குளிக்க கூடாது. குறைந்தது அரைமணி நேரமாவது பொறுத்துதான் குளிக்க வேண்டும்.
நல்லெண்ணெய் அவ்விதமே உபயோகிக்கக் கூடாது. காய்ச்சி ஆற வைத்துதான் குளிக்க வேண்டும். அதிலும் வெந்நீரில்தான் குளிக்க வேண்டும். சோப் உபயோகிக்கக்கூடாது. சீயக்காய்த்தூள் அல்லது அரைப்பு தேய்த்துதான் குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்க்கும்போது, எண்ணெயை இருதயத்தை நோக்கித் தேக்க வேண்டும். இவ்விதம் தேய்த்து வந்தால் தோல் நல்ல பளபளப்புடன் காணப்படும். உடற்சூடு கண்டிப்பாகத் தணியும்.