33.9 C
Chennai
Thursday, May 29, 2025
23 64d4f6fbcb480
Other News

மீசையை எடுக்க சொன்ன விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த மீசை ராஜேந்திரன்.

‘லியோ’ படத்தைப் பார்த்துவிட்டு மீசை ராஜேந்தர் அளித்த பேட்டி இணையத்தில் பரபரப்பாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பல வருடங்களாக முன்னணி நாயகனாக வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மக்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. அந்த வகையில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு படம் சரியாக ஓடவில்லை.

 

தற்போது விஜய்யின் ‘லியோ’ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டருக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் – விஜய்யின் லியோ படம் வருகிறது. சஞ்சய் தத், த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். லியோ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் முதல் நாளில் மட்டும் 1 100 கோடிக்குமேல் வசூல் செய்துள்ளது.

உலகம் முழுவதும் முதல் நாள் வசூல்:
இதற்கு முன்பு உலக அளவில் முதல் நாள் வசூலில்
பாகுபலி 2- 201 கோடி
RRR – 190 கோடி
கே ஜி எஃப் 2 -162 கோடி
ஜவான் -127 கோடி வசூல் செய்து இருந்தது.
ஜெயிலர் – 72 கோடி

முதல் நாள் வசூலில் ஜெயிலர் முதலிடம் பிடித்ததை அடுத்து ராஜேந்திரன் மீசையை அகற்ற வேண்டும் என விஜய் ரசிகர்கள் பலர் கூறுகின்றனர். கடந்த சில வருடங்களாக விஜய்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் கலந்து கொண்ட மீசைய ராஜேந்திரன் ரஜினிகாந்த் போல் சூப்பர் ஸ்டாராக வர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் விஜய்.

 

கடந்த சில ஆண்டுகளில், ` பீஸ்ட், சர்க்கார் ‘ போன்ற படங்கள் விஜய் இயக்கிய அதிக வசூல் செய்த படங்கள் என்று கூறப்படுகிறது, இது 200 கோடி வரை வசூலித்தது, ஆனால் அதைத் தவிர, அவர் பெரிய அளவில் சாதிக்கவில்லை.  ரஜினியின் 800 கோடிவசூலுக்குப் பிறகு விஜய்யின் சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் பற்றிப் பேசலாம். ரஜினி எப்போதும் எங்களுக்கு சூப்பர் ஸ்டார்.

லியோ படம் மட்டும் ஜெயிலர் அளவிற்கு லியோ திரைப்படம் வசூல் செய்தால் நான் என்னுடைய மீசையை எடுக்கிறேன். லியோ 300 கோடிக்கு மேல் தாண்டாது. ஒரு லட்சம் பந்தயம் வச்சிக்கலாம் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மீசை ராஜேந்திரன், நான் லியோ படத்தை பார்க்கும் போது அங்கே இருந்தவர்கள் 1000 கோடி 2000 கோடினு எல்லாம் கத்துனாங்க. ஆனால், லியோ படம் கண்டிப்பாக 1000 கொடியாய் நெருங்காது. லியோ படம் 800 கோடி வசூல் ஆகிவிட்டது என்று சொல்லட்டும் விஜய் சாரே என் மீசையை வந்து எடுக்கட்டும் என்று கூறியுள்ளார்.

Related posts

தம்பி ராமையாவின் மகனை கரம் பிடித்த அர்ஜுனின் மகள்- புகைப்படம்

nathan

quinoa tamil : கருப்பு தினை சாப்பிட்டிருக்கீங்களா? குயினோவாவின் நன்மைகள்

nathan

இதோ எளிய நிவாரணம்! மருக்களை போக்கும் சில எளிய கை வைத்தியங்கள்!

nathan

“ஆச்சி” மனோரமாவின் குடும்பமா இது? மகனைப் பார்த்து இருக்கீங்களா?

nathan

நடிகை கனிகாவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

nathan

அம்மாவின் 60வது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் அஜய் ஞானமுத்து

nathan

24 வயது காதலியுடன் இணைந்த பப்லு! புகைப்படம்!

nathan

இதய நோய் அறிகுறிகள்

nathan

யூடியூப் மூலம் மாதம் ரூ.40 லட்சம் வருவாய்:பிரஜக்தா கோலியின் சொத்து மதிப்பு தெரியுமா?

nathan