30.9 C
Chennai
Saturday, Feb 15, 2025
aRQd91f
சிற்றுண்டி வகைகள்

மிக்ஸட் பஜ்ஜி ப்ளேட்டர்

என்னென்ன தேவை?

பஜ்ஜி மாவு கலக்க…

கடலை மாவு – 1 டம்ளர்,
அரிசி மாவு – ஒரு குழிக்கரண்டி,
மைதா – 1 டீஸ்பூன்,
சோடா மாவு – சிறிது,
உப்பு – தேவைக்கு,
ரெட் கலர் பஜ்ஜி பொடி – சிறிது,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை,
கறிவேப்பிலை – 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக அரிந்தது),
இஞ்சி-பூண்டு விழுது – சிறிது,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

காய்கறிகள்…

பஜ்ஜி மிளகாய், உருளைக்கிழங்கு, பாலக்கீரை, வெங்காயம், வாழைக்காய், காலிஃப்ளவர் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பஜ்ஜி கலக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களையும் சேர்த்து நன்கு கெட்டியாகக் கரைக்கவும். வாழைக்காய், மிளகாயை நீளமாகவும், உருளையை சதுர வடிவிலும், வெங்காயத்தை வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளவும். பாலக்கீரையை முழுசாக அலசி வைக்கவும். எண்ணெயைக் காய வைத்து காய் வகைகளை ஒவ்வொன்றாக பஜ்ஜிக் கலவையில் தோய்த்து பொரித்து எடுத்து எண்ணெய் வடித்து எடுக்கவும். பஜ்ஜி மிளகாயில் உள்ள காரத்தை எடுக்க வினிகர், உப்பு கலந்த தண்ணீரில் மிளகாயின் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி, நான்காக வெட்டி 10 நிமிடங்கள் ஊற வைத்து பிறகு பஜ்ஜி போடலாம். பெருங்காயத்துக்கு பதில் சோம்பும் சேர்க்கலாம். மிளகாய் தூளுக்கு பதில் மிளகுத் தூளும் சேர்க்கலாம். aRQd91f

Related posts

பட்டாணி பூரி

nathan

மரவள்ளிக்கிழங்கு உருண்டை

nathan

பட்டர் நாண்

nathan

வடகறி–சமையல் குறிப்புகள்!

nathan

தினை உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

சூடான மசாலா வடை

nathan

மெக்ஸிகன் டா கோஸ் (Mexican Taccos)

nathan

சுவையான தக்காளி பஜ்ஜி

nathan

மாலை நேர சிற்றுண்டி மசாலா இடியாப்பம்

nathan