34.1 C
Chennai
Monday, Jul 28, 2025
1 quinoa upma 1669396393
ஆரோக்கிய உணவு OG

தினை உப்புமா

தேவையான பொருட்கள்:

* தினை – 1/2 கப்

* எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 1-2 (பொடியாக நறுக்கியது)

* வரமிளகாய் – 1

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* கறிவேப்பிலை – சிறிது

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* பாசிப்பருப்பு – 1/2 டீஸ்பூன்

* சிறிய கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)

* பீன்ஸ் – 5-6 (பொடியாக நறுக்கியது)

* பச்சை பட்டாணி – 1/2 கப்

* தண்ணீர் – 1 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் தினையை நீரில் 2-3 முறை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* கடுகு நன்கு வெடித்ததும், அதில் சீரகம், உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* அதன் பின் அதில் நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

Quinoa Upma Recipe In Tamil
* பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து குறைவான தீயில் வைத்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் பட்டாணி சேர்த்து நன்கு கிளறி விட்டு குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.

* பின்பு அதில் கழுவிய தினையை சேர்த்து நன்கு கிளறி விட்டு, குறைவான தீயில் 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* பின் அதில் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.

* அடுத்து ஒரு மூடியைக் கொண்டு வாணலியை மூடி வைத்து, தினையை நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.

* நீரானது நன்கு வற்றி தினை நன்கு வெந்துவிட்டால், அடுப்பை அணைத்துவிட்டு, உப்புமாவின் மேல் கொத்தமல்லியைத் தூவி ஒருமுறை கிளறினால், சுவையான மற்றும் சத்தான தினை உப்புமா தயார்.

Related posts

சீஸ் தோசை

nathan

சர்க்கரை நோய் சாப்பிட கூடாதவை

nathan

கொலஸ்ட்ரால் உள்ள உணவுகள் ?

nathan

quinoa in tamil : கருப்பு தினை சாப்பிட்டிருக்கீங்களா?

nathan

மஞ்சள்காமாலை உணவு வகைகள்

nathan

sesame seeds in tamil எள்: சத்துக்களின் பொக்கிஷம்

nathan

இரத்தத்தை சுத்தம் செய்ய நெல்லிக்காய் சாப்பிடுங்க !

nathan

இனிப்பு உருளைக்கிழங்கின் நன்மைகள் – sweet potato benefits in tamil

nathan

வாய் புண்கள்: பயனுள்ள சிகிச்சை விருப்பங்கள்

nathan