தேவையான பொருட்கள்:
* எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* கத்திரிக்காய் – 4 (நறுக்கியது)
* பாவ் பாஜி மசாலா – 2-3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
Brinjal Tawa Roast Recipe In Tamil
* பின்னர் அதில் கத்திரிக்காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு மூடி வைத்து கத்திரிக்காயை வேக வைக்க வேண்டும்.
* கத்திரிக்காய் நன்கு வெந்ததும், அதில் பாவ் பாஜி மசாலாவை சேர்த்து நன்கு சில நிமிடங்கள் கிளறி இறக்கினால், சுவையான கத்திரிக்காய் தவா ரோஸ்ட் தயார்.