29.6 C
Chennai
Thursday, May 22, 2025
1459497736 239
சரும பராமரிப்பு

கழுத்தில் ஏற்படும் கருமை நிறத்தை போக்க எளிய வழிகள்

சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும்.

சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழிமுறைகள் இதோ..

* கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.

* முட்டைக்கோஸை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

* பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.

* கழுத்து கருமையை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்.1459497736 239

Related posts

உங்களுக்கு சுருக்கமில்லாத சருமத்திற்கு தினமும் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்!!

nathan

இயற்கையான முறையில் அக்குள் முடியை நீக்குவதற்கான சிறந்த வழிகள்!!!

nathan

கழுத்தின் இளமை ரகசியம்,

nathan

எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டுமா

nathan

அழகழகாய்… அசத்தல் டிப்ஸ்!! அழகு குறிப்புகள்!

nathan

இளமையுடன் இருக்க… எலுமிச்சை!….

sangika

இரவு க்ரீமை தேர்வு செய்வது எப்படி?

nathan

சருமத்துக்கு உணவு ஃபேஷியல்

nathan

Beauty tips… சரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்!

nathan