32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
சரும பராமரிப்பு

மருத்துவத்துக்கு மட்டுமல்ல அழகிற்கும் உதவும் துளசி

அழகுக்கு அழகு சேர்ப்பதில் சமையலறை பொருட்களிலிருந்து துளசி வரை நிறையவே இருக்கிறது. உடலில் ஏற்படக்கூடிய அனைத்து நோய் தொற்று மட்டுமல்லாது முக அழகிற்கும் பெரிதும் உதவுகிறது. பொதுவாக, குளிர்காலத்தில் பருக்கள் வராது.

வந்தால் சீக்கிரத்தில் போகாது! அதற்கு சந்தனத்தூள், எலுமிச்சைச் சாறு, துளசிச் சாறு, வெட்டிவேர் பவுடர் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, கலந்து, பருக்கள் மீது தடவி ஐந்து நிமிடம் கழித்து கழுவுங்கள்! ஒரே வாரத்தில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

துளசி இலையுடன், பத்து கிராம் வெள்ளரி விதை, சிறிது கஸ்தூரி மஞ்சள் கலந்து அரைத்து, கண்களைச் சுற்றிலும் பூசிக் கழுவுங்கள். தோல் மிருதுவாகி கருமை காணாமல் போய்விடும். 50 கிராம் துளசி இலை, 10 கிராம் மிளகு இவற்றை கால் கிலோ நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வாரம் 2 முறை தலைக்குத் தேய்த்து, சீயக்காய் (அ) பயத்தமாவு போட்டு அலசுங்கள்.

கூந்தல் மிருதுவாகும். பொடுகும் வராது. புருவம், கண் இமைகளில் முடி இல்லாதவர்கள், இந்த எண்ணெயை அந்த இடங்களில் தடவினால், கருகருவென முடி வளரும். கரடு முரடான சருமத்தைக்கூட மிருதுவாக்குவதில் சிறந்தது துளசி. பால் பவுடர், துளசி பவுடர் இரண்டும் தலா அரை டீஸ்பூன் எடுத்து இதனுடன் சந்தன பவுடர், கஸ்தூரி மஞ்சள் தலா கால் டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள்.

இந்த பவுடருடன் பாலை சேர்த்து முக்கியமாக வெயில் காலத்தில் தயிரை சேர்க்கவும் நன்றாகக் குழைத்து இந்த பேஸ்ட்டை தினமும் முகம், கை, கால்களில் தேய்த்துக் குளித்து வந்தால் தோல் மிருதுவாகும். சருமத்துக்கு நல்ல நிறத்தையும் கொடுக்கும்.

Related posts

குளிர்காலம்: சருமத்தை வறட்சியை தடுக்கும் வழிகள்

nathan

சருமத்தை பாதுகாக்கும் விளக்கெண்ணெய்

nathan

தீக்காயத்தினால் உண்டாகும் தழும்பை மறையச் செய்யும் சுலபமான வழிகள்!!

nathan

உங்க கை மற்றும் கால் கருப்பா இருக்கா? அத வெள்ளையாக்க இதோ சில டிப்ஸ்…

nathan

உரோமங்களை அகற்ற ஈஸி வழி

nathan

இறந்த செல்கள் அனைத்தையும் நீக்கி பொலிவு பெற உதவும் வாழைப்பழம்…

nathan

ரோஸ் வாட்டரைக் கொண்டு அழகை அதிகரிக்க சில வழிகள்!!!

nathan

ஃபிஷ் ஸ்பா அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும்

nathan

தோல் வறட்சி நீங்க எலுமிச்சை!…

sangika