6c7b9b1a 4422 4c14 9b5d cf6946e787ab S secvpf
முகப் பராமரிப்பு

சருமத்தை பாதுகாக்கும் களிமண் தெரப்பி

பக்க விளைவுகள் இல்லாத, ரசாயனக் கலப்புகள் இல்லாத சிறந்த தீர்வு இயற்கை மருத்துவத்தில் உள்ளது. அதுதான் களிமண் தெரப்பி.
உடலுக்குக் களிமண் தெரப்பி செய்யும்போது, மண்ணுக்கு இருக்கின்ற பாசிட்டிவ் எனர்ஜி நம் உடலுக்கும் கிடைக்கும். மண்ணில் நிறைய வகைகள் உள்ளன. பெரும்பாலும் சிகிச்சைக்குப் பயன்படுத்துவது களிமண் மற்றும் சிவப்பு மண். சருமம் தொடர்பாக சிகிச்சை செய்யும்போது களிமண்ணால் சிகிச்சை செய்வது நல்லது.

களிமண்ணுடன் மஞ்சள், வேப்பிலை, கற்றாழைப் பொடி போன்ற மருத்துவப் பொக்கிஷங்கள் சேர்ந்த கலவையாகத் தயாரித்துப் பூசலாம்.
உடல் முழுவதும் பூச வேண்டும் எனில், பாதம், தொடை, மேல் உடல், முகம் எனப் பூச வேண்டும். முகத்துக்கு மட்டும் பூச வேண்டும் எனில் தாடை, கன்னங்கள், நெற்றி எனப் பூச வேண்டும்.

கண்களுக்குப் பூச வேண்டும் எனில், பருத்தித் துணியை ஈரப்படுத்தி, கண்களின் மேல் வைத்து, அதன் மேல் களிமண்ணைப் பூச வேண்டும்.

மண்ணில் தாதுக்கள் நிறைந்திருக்கும். சூரிய ஒளியில் இருந்து சத்துக்களைப் பெற, மண்ணில் உள்ள தாதுக்கள் உதவும். இவை அனைத்தும் சருமத்தையும் சுத்தம் செய்யும். கிளென்சிங் செய்த பலன் கிடைக்கும்.

சருமத்தின் மேல் படர்ந்த அழுக்கு, தூசு, கிருமிகள் நீங்கும். சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகமாகும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும் இடத்தில், சருமம் பளபளப்பாக மாறும். சரும நோய்கள் எதுவும் நம்மை அண்டாது.

முகத்தில் வழியும் எண்ணெய்ப் பசை குறையும். பருக்கள் வருவது தடுக்கப்படும். களிமண் கலவையுடன் இரண்டு சொட்டு லாவண்டர் எண்ணெய் ஊற்றிப் பூசிவந்தால், சருமமும் மிருதுவாகும்.

களிமண் பூசிய பின் 30 நிமிடங்கள் கழித்து நீரால் கழுவ வேண்டும். வாரத்தில் மூன்று முறை களிமண் சிகிச்சை செய்துகொள்ளலாம். வறண்ட சருமத்தினர் வாரம் ஒருமுறை செய்தாலே போதும். காலை 12 மணிக்கு முன் களிமண் சிகிச்சைசெய்வது நல்லது. மூக்குத் துவாரங்கள், உதட்டுக்கு மேல் பூசுவதைத் தவிர்க்க வேண்டும்.

முகத்தில் பூசும்போது, இளஞ்சூடான நீரில் கலந்து பூச வேண்டும். அரை செ.மீ அளவுக்கு உடல் முழுவதும் களிமண்ணைப் பூச வேண்டும். கண்களில் களிமண் பூசக் கூடாது.

சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தும் சருமம் என்றால், முதலில் காது ஓரம் அல்லது கைகளில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் கழுவலாம். பூசிய இடத்தில் அரிப்பு, சிவப்பாகுதல் போன்ற பிரச்னைகள் இருப்பின், களிமண் சிகிச்சையைச் செய்யாமல் தவிர்க்கலாம்.

முதன்முறையாக சிகிச்சை செய்யும்போது, சித்த, ஆயுர்வேத அல்லது நேச்சுரோபதி மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செய்துகொள்ள வேண்டும். பிறகு, அவர் பரிந்துரையின் பேரில் வீட்டில் செய்யலாம். களி மண் பேக் சித்தா, ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும். ஆற்று நீருக்குக் கீழ், இரண்டு அடி ஆழத்தில் இருக்கும் மணலைத்தான் சிகிச்சைக்குப் பயன்படுத்த வேண்டும். அந்த மண்ணைச் சுத்தம்செய்து, ஒருநாள் முழுவதும் நீரில் ஊறவைத்து, பிறகு வெயிலில் உலரவைத்து மிருதுவான பொடியாக மாற்றி, மீண்டும் வெயிலில் காயவைத்துப் பயன்படுத்த வேண்டும்.
6c7b9b1a 4422 4c14 9b5d cf6946e787ab S secvpf

Related posts

நீங்கள் அழகான சருமத்தை பெற செர்ரி பழத்தை இப்படி பயன்படுத்துங்கள்! செய்முறை உள்ளே…

nathan

இதோ எளிய நிவாரணம்! முகப்பரு பிரச்சனைக்கு ‘டாடா’ சொல்லணுமா? அப்ப வாரத்துக்கு 2 தடவை இத செய்யுங்க…

nathan

முதுமையை தள்ளிப் போடும் சூப்பர் உணவுகள்!!!

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சிம்பிள் மேக்கப் போடும் முறை

nathan

ஃபேஸ் பேக் வீட்டிலேயே செய்ய

nathan

வீட்டில் இருந்தபடியே அழகான தோலைப் பெற 10 சிறந்த நைட் கிரீம்கள்

nathan

பளீச் முகத்திற்கு இத மட்டும் யூஸ் பண்ணா போதும்!

nathan

உங்க முகத்துல எண்ணெய் வழியுதா? இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை யூஸ் பண்ணுங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா சீன பெண்கள் இவ்ளோ அழகா இருக்க அரிசி கழுவின தண்ணி தான் காரணமாம்.

nathan