30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
​பொதுவானவை

வெஜிடபிள் கோதுமை ரவை கஞ்சி

தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை – 1 கப்,
தேங்காய்ப்பால் – 1 கப்,
பச்சைமிளகாய் – 2,
நறுக்கிய கேரட், பீன்ஸ், பட்டாணி – அரை கப்,
தண்ணீர், உப்பு – தேவையான அளவு,
கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை:

* கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

* பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு, உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து வேக வைக்கவும்.

* அரை வேக்காடு வெந்ததும், அதில் தேங்காய்ப்பால் மற்றும் வறுத்த கோதுமை ரவையைச் சேர்த்துக் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்கவிட வேண்டும்.

* வெந்ததும், கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கி பரிமாறவும்.

* சுவையான சத்தான வெஜிடபிள் கோதுமை ரவைக் கஞ்சி ரெடி.

பலன்கள்: சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சாப்பிட்டுவர, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். காய்கறிகள் சேர்வதால் தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து கிடைக்கும்.

Related posts

பைனாப்பிள் ரசம்

nathan

உலக மகளிர் நாள்: எப்போது தொடங்கியது?

nathan

பெண் குழந்தைகளுக்கு முதல் நண்பன்… அப்பா

nathan

‘அரியும்’ முன் அறிந்து கொள்வோம்!!

nathan

நீங்கள் இல்லத்தரசியா? உங்களுக்கான பயனுள்ள தகவல்கள்

nathan

மோர் ரசம்

nathan

இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்

nathan

சுவையான ஓட்ஸ் ரவா தோசை

nathan

கொழுப்பை கரைத்திடும் – கொள்ளு ரசம்

nathan