அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி, முகத்தின் அழகோ கண்களில் தான் உள்ளது.
முகத்திற்கு அழகு சேர்ப்பதே கண்கள் தான், கண்கள் பொலிவிழந்து காணப்பட்டால் முகமே சோர்ந்து காணப்படும்.
* தினமும் கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் தேனை தடவி, ஒரு மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கருவளையம் நீங்கிவிடும்.
* ஒரு டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன், 2 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் தடவி வந்தால் கண்கள் கவர்ச்சியாக இருக்கும்.
* அரை டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 4-5 துளிகள் தேன் சேர்க்க வேண்டும், இதனை தடவி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கருவளையம் விரைவில் நீங்கும்.
* இதுமட்டுமின்றி வாழைப்பழத்துடன் தேன் சேர்த்து தடவ வேண்டும், அரைமணி நேரம் கழித்து கழுவினால் கண்கள் கவர்ச்சியாக இருக்கும்.
* எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை கலந்து தடவி வந்தால் கருவளையங்கள் நீங்கும்.
* ஒரு சிறிய அளவுள்ள உருளைக்கிழங்கை துருவி, அதில் இரண்டு ஸ்பூன் எடுத்து அதை பிழிந்து சாறு எடுக்கவும். ஒரு பஞ்சின் உதவியுடன், இந்த சாற்றை உங்கள் கண்களைச் சுற்றி தடவுங்கள். அது காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதை படுப்பதற்கு முன் வழக்கமாக செய்து வந்தால், கருவளையங்களை வெளிற வைத்து விடும்.
* கஸ்தூரி மஞ்சள், சிவப்பு சந்தனம் ஆகியவற்றை சம அளவில் கலந்து தினமும் பூசி வந்தால் கண்களின் கீழே உள்ள கறுப்பு வளையம் மாறும்.