35.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
ht43888
மருத்துவ குறிப்பு

அன்று தங்கப் பல்…இன்று கோல்டு ஃபில்லிங்!

முகத்தின் அழகுக்குப் பிரதானமாக இருப்பது பற்கள். பல் போனால் சொல் போகும் என்பதால்தானே மாற்றுப்பல்லை நாடுகிறோம். 80கள் வரையிலுமே பற்கள் மறுசீரமைப்பு சிகிச்சையில் ‘தங்கப்பல்’ தனக்கென அசைக்க முடியாத ஓர் இடத்தை பிடித்திருந்தது. காலப்போக்கில் அதன் இடத்தை வேறு பொருட்கள் பிடித்தன. பழையன புகுதல் வரிசையில் இப்போது மீண்டும் பல் சிகிச்சையில் தங்கம் பிரபலமாக ஆரம்பித்திருக்கிறது. பற்குழிகளை அடைப்பதிலும், உடைந்த பற்களை நிரப்புவதிலும் தங்கத்தின் பயன்பாடு பற்றிப் பேசுகிறார் பல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பிரபாகர்.

இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது எப்போதும் ஒரு ஈர்ப்பு உண்டு. எந்த வகையிலாவது தங்கத்தைத் தம்முடன் வைத்திருப்பதை அந்தஸ்தின் அடையாளமாகக் கருதுகிறவர்கள் அவர்கள். சில தலைமுறைகளுக்கு முன்புவரை தங்கப்பல் கட்டிக் கொள்வது பிரபலமாக இருந்தது. பிறகு அந்த சிகிச்சையை திறம்படச் செய்ய இங்கே சரியான நிபுணர்கள் இல்லாத காரணத்தினால், சிறிது காலம் காணாமல் போனது. இன்று புது வடிவம் எடுத்து மீண்டும் வந்திருக்கிறது.

சொத்தை நீக்கிய பற்களை நிரப்பவும், பற்குழிகளை நிரப்பவும் சமீப காலங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிற சில்வர் மற்றும் காம்போசைட் ஃபில்லிங்குகளை விட பலமடங்கு சிறந்தது கோல்டு ஃபில்லிங். இதைத் தயாரிப்பது கடினமான வேலைதான் என்றாலும், இதன் தரத்துடன் வேறு எந்த ஃபில்லிங்கையும் ஒப்பிடவே முடியாது.

அனஸ்தீசியா கொடுப்பது, இரண்டாவது முறை மருத்துவரின் அப்பாயின்ட்மென்ட்டுக்கு காத்திருப்பது போன்ற தொல்லைகள் இதில் இல்லை. 50 ஆண்டுகள் வரை நீடித்திருப்பதால் வாழ்நாளில் ஒருமுறை செய்து கொண்டாலே போதுமானது. மற்ற பொருட்களை வைத்து பொருத்தும் பணியில் முனைகள் வளைந்தும் ஒடிந்தும் வடிவமைப்பில் மாற்றமடையலாம். கோல்டு ஃபில்லிங்கில் இந்தப் பிரச்னைகளும் இருப்பதில்லை.கோல்டு ஃபில்லிங் ஏன் சிறந்தது என்பதற்கு இன்னும் சில காரணங்களையும் பட்டியலிடலாம். அவை… 24 கேரட் சுத்தத் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.

நீண்ட நாட்கள் நிறம் மாறாமல் அப்படியே 50 வருடங்கள் கூட நீடித்து நிலைத்து நிற்கக்கூடியது. உலோகங்களில் உயர்ந்ததாக கருதப்படும் தங்கம் திடமானது. வாயினுள் உள்ள திசுக்களுடன் ஒத்துப்போகக்கூடிய கட்டமைப்புகளுடன் இருப்பதால் பற்திசுக்களுக்கு ஒவ்வாமையினால் வரக்கூடிய புண்கள் வராது.

தகதகவென்று மின்னிக்கொண்டு தனி அழகைக் கொடுக்கக்கூடியது. சாப்பிடும் உணவினால் ஒளி மங்குவதோ, துருப்பிடிக்கவோ செய்யாது. பற்குழி சுவர்களில் சரியாக பொருந்துவதால் சிறு கசிவும் ஏற்படாது. தங்கத்தின் அடர்த்தி மற்றும் கடினத்தன்மையால் சிகிச்சையின் போது அழுத்தம் கொடுக்கும் போது தாங்கக்கூடிய வலிமை உடையது. இடைவெளிகளை சிமென்ட் வைத்துப் பூச வேண்டிய தேவையில்லை. வளைந்து கொடுக்கக்கூடிய தன்மையால், ஃபில்லிங் சிதையாத வகையில் சரியாக பொருத்த முடிகிறது.
ht43888

Related posts

ஆய்வு கட்டுரை ! கொரோனா அறிகுறிகள் எல்லாம் இருந்தும் பரிசோதனையில் “நெகட்டிவ்” வருவது ஏன்?

nathan

உங்களுக்கு தெரியுமா அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும் 5 உணவுகளும் இவைதான்..

nathan

வெள்ளைப்படுதலை வராமல் தடுக்கும் இயற்கை மருத்துவம்

nathan

தொடர்ந்து விக்கல் வந்தால் அதனை தடுத்து நிறுத்துவது எப்படி?

nathan

பெண்களுக்கு வயது அடிப்படையில் ஏற்படும் நோய்களும் – தடுக்கும் முறைகளும்

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்களின் மார்பக வளர்ச்சிக்கும், வழுக்கைத்தலைக்கும் இந்த உணவு தான் காரணம்!

nathan

பாடாய்படுத்தும் மாதவிடாய் பிரச்சனையில் இருந்து தீர்வு காண பாட்டி வைத்தியம்.

nathan

தெரிஞ்சிக்கங்க…பிரசவ காலத்தில் கர்ப்பிணி பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

nathan

செரிமானம் மற்றும் வாயு தொல்லை பிரச்சனையா..?

nathan