நம் முகங்களில் தழும்புகள் உருவாக அலர்ஜிகள் முதல் விபத்து வரை எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனாலும், அவற்றை சரி செய்வதற்குத் தேவையான சில வழிமுறைகள் இருக்கத் தான் செய்கின்றன.
உங்கள் முகத்திலும் இதுப்போன்ற தழும்புகள் அல்லது கருப்பான வடுக்கள் உள்ளனவா? அவை உங்கள் முக அழகையும், மன அமைதியையும் கெடுக்கின்றனவா? இயற்கையான முறையில் இந்தத் தழும்புகளை அகற்ற சில வழிகள் உள்ளன.
ஆண்களே! வெயிலால் சரும நிறம் மங்குகிறதா? வீட்டிலேயே அதை சரிசெய்யுங்க!
தழும்புகளை நீக்குவதற்கு மட்டுமல்ல, இவை உங்கள் சருமத்தையும் மேலும் அழகாக்கிக் காண்பிக்கும். இதெல்லாம் நடக்க வேண்டுமென்றால், நீங்கள் பொறுமையாக 2 வாரங்களுக்காவது, இந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்து வர வேண்டும்.
இப்போது, இயற்கையான முறையில் தழும்புகளை நீக்குவதற்கான வழிகளைப் பற்றிப் பார்ப்போம்.
அழகை அதிகரிக்க உலகில் மேற்கொள்ளும் சில விசித்திரமான ஃபேஷியல்கள்!
ஆலிவ் எண்ணெய்
தழும்புள்ள முகத்தில் ஆலிவ் எண்ணெயைத் தேய்த்து, முகத்தை மெல்லிய ஆவியில் சிறிது நேரம் காட்டிக் கொண்டிருக்க வேண்டும். இதனால் முகத்தில் உள்ள சிறுசிறு துளைகள் மறைந்து, தழும்புகளும் மறையத் தொடங்கும்.
சந்தனம்
சந்தனப் பவுடரை ரோஸ் வாட்டர் அல்லது பாலுடன் கலந்து, அக்கலவையை முகத்தில் தேய்க்க வேண்டும். பின்னர் ஒரு மணிநேரம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
பாதாம்
பால் அல்லது நீரில் பாதாம் பருப்பை 12 மணிநேரம் ஊற வைத்து, பின் அதன் தோலை உரித்து விட்டு, அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின், அரைத்ததை ரோஸ் வாட்டருடன் கலந்து பேஸ்ட் செய்து, அந்தப் பேஸ்ட்டைத் தழும்புகளின் மீது தடவி வர வேண்டும்.
எலுமிச்சை
எலுமிச்சைச் சாற்றில் பஞ்சை நன்றாக ஊற வைத்து, பின் அதை மெதுவாக முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். எலுமிச்சைச் சாற்றை தோல் உறிஞ்சும் வகையில் இவ்வாறு செய்ய வேண்டும். இதனால், எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, தழும்புகளை மறையச் செய்து புதிய ஃப்ரெஷ்ஷான தோல் வருவதற்கு உதவும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அதை தழும்புகளின் மீது ஸ்கரப் செய்து ஓரிரு நிமிடங்கள் வரை அடிக்கடி தேய்க்க வேண்டும். பின் முகத்தை மிதமான சுடுநீர் கொண்டு கழுவ வேண்டும்.
முள்ளங்கி விதை
முள்ளங்கி விதைகளை நன்றாக அரைத்து, தழும்புள்ள முகத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை நன்றாக ஜூஸாக்கி, அதை தழும்புகளில் தேய்க்க வேண்டும். உருளையில் உள்ள சல்பர் மற்றும் பொட்டாசியம் ஆகியவை தழும்புகளைக் குறைக்கும் தன்மை கொண்டவை.
க்ரீம்/ஜெல்
தழும்புகளை நீக்குவதற்கென்றே, சில க்ரீம்கள் மற்றும் ஜெல்கள் கடைகளில் கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்தி வந்தாலும், முகத்திலுள்ள தழும்புகள் மற்றும் வடுக்கள் மறைந்து, உங்கள் முகம் பளிச்சிடும்.
லெமன் ஜூஸ்
எலுமிச்சைச் சாற்றை தினமும் 3 முறை குடித்து வந்தாலும், முகத் தழும்புகள் சிறிது சிறிதாக மறையத் தொடங்கும்.